’கோலிக்கு வைக்கப்பட்ட செக்..’ இங்கிலாந்து ODI தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.!
இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் தலைமையில் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், குல்தீப், பும்ரா, அர்ஷ்தீப் உள்ளிட்ட 15 பேர் உள்ளனர். கோலியின் சேர்க்கை உடற்தகுதி அடிப்படையில் தீர்மானிக்கப்படும் நிலையில், அவர் விலகினால் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது.
இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடரில் அனைத்து போட்டிகளையும் வென்ற இந்திய அணி தொடரை வென்று அசத்தியது.
இந்தசூழலில் அடுத்த தொடருக்காக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் சுப்மன் கில் தலைமையிலான இந்தியா பல போட்டிகளில் விளையாடவிருக்கிறது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய அணி ஜூலை 1 முதல் ஜூலை 19 வரை 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவிருக்கிறது.
இந்நிலையில் 3 ஒருநாள் போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), ரோகித் சர்மா, கேஎல் ராகுல் (WK), இஷான் கிஷன் (WK), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குர்னூர் ப்ரார் என 15 பேர் கொண்ட வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அணியில் விராட் கோலியின் பெயர் இடம்பெற்றிருந்தாலும் அவருடைய உடற்தகுதியை பொறுத்தே இறுதிசெய்யப்படுவார் என கூறப்பட்டுள்ளது. ஒருவேளை விராட் கோலி இடம்பெறவில்லை என்றால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சதமடித்த ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

