’தேடும் கண் பார்வை தவிக்க.. துடிக்க..’- சந்தோஷத்தில் அனுஷ்காவை தேடிய விராட் கோலி.. வைரல் வீடியோ!

மனைவி அனுஷ்கா சர்மாவை கீழிருந்து தேடும் விராட் கோலியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விராட் கோலி
விராட் கோலிட்விட்டர்

இந்தியாவில் நடைபெற்று வரும் ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் நேற்று, (நவ.15) நடந்த முதலாவது அரையிறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி, 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.

இந்தப் போட்டியில் நட்சத்திர வீரர் விராட் கோலி, சதம் அடித்ததுடன் ஒருசில புதிய சாதனைகளையும் படைத்தார். அதில் உலகக்கோப்பை தொடர் ஒன்றில் சச்சின் குவித்திருந்த 673 ரன்களை முறியடித்திருந்தார். மறுபுறம், அதே சச்சின் ஒருநாள் போட்டிகளில் 49 சதம் கண்டிருந்ததையும் விராட் கோலி முறியடித்து 50 சதம் கண்டார். தவிர, மேலும் சில சாதனைகளை விராட் கோலி படைத்திருந்தார். இதனால் அவருக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: ”அன்று என் கால்களைத் தொட்டீர்கள்.. இன்று என் இதயத்தை” - கோலியின் சாதனை குறித்து சச்சின் நெகிழ்ச்சி!

முன்னதாக, தாம் சதம் அடித்து சாதனை நிகழ்த்திய பிறகு விராட் கோலி, தன் மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு முத்தம் தந்து அன்பைப் பரிமாறிக் கொண்டார். அவரும் பதிலுக்கு முத்தம் தந்து அன்பைப் பரிமாறினார். இதுபோன்று தாம் சிறப்பாக விளையாடும் தருணங்களில் விராட் கோலி தன் மனைவிக்கு நடு மைதானத்தில் இருந்தபடியே, அனுஷ்கா இருந்த இடத்தை நோக்கி காதலோடு Flying Kiss-ஐ காற்றில் பறக்கவிடுவார். அவரும் பதிலுக்குத் தந்து கோலியை உற்சாகப்படுத்துவார்.

இது இயல்பானதுதான். ஆனால், அதைவிட நேற்று ஒரு விஷயம் நடந்ததுதான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 117 ரன்களில் ஆட்டமிழந்த விராட் கோலி, டிரஸ்ஸிங் ரூமுக்குச் சென்று உடை மாற்றினார். பின்னர், அந்த ரூமைவிட்டு வெளியில் வந்த விராட் கோலி, மேல் கேலரியில் இதர வீரர்களின் மனைவிகளுடன் அமர்ந்திருந்த அனுஷ்காவை எட்டிப் பார்த்தார். ஆனாலும், அவரால் அங்கிருந்து அனுஷ்காவை பார்க்க முடியவில்லை. அதுபோல், அனுஷ்காவும், தன் கணவர் கீழ்த்தளத்திலிருந்து பார்ப்பதை அறியவில்லை. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. மனைவி மீது கோலி வைத்திருக்கும் அன்பை, பலரும் பதிவிட்டு வாழ்த்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: Unstoppable... ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா! சச்சினின் 20 ஆண்டு ரெக்கர்டை முறியடித்த விராட் கோலி!

இன்று, கோலியைக் கொண்டாடும் இதே கிரிக்கெட் உலகம், இரண்டாடுகளுக்கு முன்பு கடுமையாக விமர்சித்தது. அப்போதெல்லாம் அவருக்கு ஆறுதல் சொல்ல இரண்டு நபர்களைத் தவிர வேறு ஆள் இல்லை. அதில் ஒன்று, அவருடைய நெருங்கிய நண்பரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான தல தோனி.

மற்றொருவர் அவருடைய உயிராக வாழும் அன்பு மனைவி அனுஷ்கா. அவருடைய வேதனைகளைப் புரிந்துகொண்டு, ஆறுதல்படுத்தி மீண்டும் விராட் கோலியை அதே ஃபார்முக்கு உருவாக்கிய பெருமை அனுஷ்காவுக்கும் உண்டு. அந்த அன்பு, காதல், உயிர், நம்பிக்கை... என எல்லாமுமாக இருக்கும் மனைவியைத்தான் இப்போது தேட வைத்துள்ளது. இது, இன்று மட்டுமல்ல, என்றும் தேடவைக்கும். அதுதானே உண்மையான காதல்!

இதையும் படிக்க: ஒடிசா: தனக்காக சிறை சென்ற காதலனை காத்திருந்து திருமணம் செய்த பெண்.. பெற்றோர் கொடுத்த விநோத தண்டனை!

இதையும் படிக்க: ஒரு கேட்சைத் தவறவிட்ட ஷமி... ஆனால் அடுத்து நடந்த ட்விஸ்ட்! உலகக்கோப்பையில் புதிய சாதனை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com