virat kohli
virat kohliweb

ஃபீல்டராக அதிக கேட்ச்கள்.. டிராவிட்டை பின்னுக்கு தள்ளி வரலாறு படைத்த கோலி!

சர்வதேச கிரிக்கெட்டில் ஃபீல்டராக அதிக கேட்ச்கள் பிடித்த இந்திய வீரராக மாறி சாதனை படைத்துள்ளார் விராட் கோலி.
Published on

2024 சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா 4 அணிகள் தகுதிபெற்றுள்ளன.

இந்தியா ஆஸ்திரேலியா
இந்தியா ஆஸ்திரேலியா

இந்நிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதிப்போட்டி துபாய் மைதானத்தில் இன்று நடைபெற்றுவருகிறது.

ஃபீல்டராக அதிக கேட்ச்கள்..

பரபரப்பாக தொடங்கிய முதல் அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 264 ரன்கள் சேர்த்தது. அதனைத்தொடர்ந்து 265 ரன்களுடன் விளையாடிவரும் இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 103 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து ஆடிவருகிறது.

virat kohli
virat kohli

இந்தப்போட்டியில், அக்சர் பட்டேல் பந்துவீச்சில் ஜோஸ் இங்கிலீஸ் அடித்த கேட்ச்சை பிடித்த விராட் கோலி, ஃபீல்டராக அதிககேட்ச்கள் பிடித்த இந்திய வீரராக மாறி சாதனை படைத்தார்.

இந்தப்பட்டியலில் 334 கேட்ச்களுடன் முதலிடத்தில் இருந்த ராகுல் டிராவிட்டை பின்னுக்கு தள்ளி 335 கேட்ச்களுடன் வரலாறு படைத்துள்ளார் கிங் கோலி. இதன்மூலம் இந்திய கிரிக்கெட்டின் சிறந்த ஃபீல்டராக முத்திரை பதித்துள்ளார் கோலி.

virat kohli
virat kohli

ஃபீல்டராக அதிக கேட்ச்கள் பிடித்த இந்தியர்கள்:

* விராட் கோலி - 335

* ராகுல் டிராவிட் - 334

* முகமது அசாருதீன் - 261

* சச்சின் டெண்டுல்கர் - 256

* ரோஹித் சர்மா - 223

விராட் கோலியின் இந்த சாதனைக்காக புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது பிசிசிஐ.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com