இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 52 ரன்களை அடித்து 73வது ஒருநாள் அரைசதத்தை பதிவுசெய்தார்.
இதன்மூலம் ஆசியாவில் மூன்றுவடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து 16,000 ரன்களை எட்டிய வீரராக மாறினார் கிங் கோலி. இதை குறைவான இன்னிங்ஸில் அதிவேகமாக எட்டிய வீரராக மாறிய விராட் கோலி 340 இன்னிங்ஸ்களில் எட்டி குமார் சங்ககராவின் (410) சாதனையை முறியடித்தார்.
இங்கிலாந்துக்கு எதிராக 52 ரன்களை அடித்த விராட் கோலி, ஒட்டுமொத்தமாக இங்கிலாந்துக்கு எதிராக 4000 ரன்களை அடித்த முதல் ஆசிய வீரராக மாறினார்.
இதுவரை இங்கிலாந்துக்கு எதிராக டான் பிராட்மேன், ஆலன் பார்டர், ரிக்கி பாண்டிங், விவியன் ரிச்சர்ட்ஸ், ஸ்டீவ் ஸ்மித் முதலிய வீரர்கள் மட்டுமே 4000 ரன்களுக்கு மேல் அடித்திருந்த நிலையில், முதல் ஆசிய வீரராக இந்த சாதனையை படைத்தார் கிங் கோலி.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 73வது சதத்தை பதிவுசெய்த விராட் கோலி, தோனியின் அரைசதங்களின் எண்ணிக்கையை சமன்செய்தார். 72 அரைசதங்கள் அடித்த கங்குலியின் சாதனையை முறியடித்தார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 50 சதங்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.