‘ஒரு போஸ்ட் போட்டா ரூ.11 கோடியா?’ - விராட் கோலி விளக்கம்
இன்ஸ்டாகிராம் தளத்தில் படு ஆக்டிவாக இயங்கி வருபவர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. அவரது இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 25 கோடியே 60 லட்சம் என்ற அளவில் உள்ளது.
இந்நிலையில் இன்ஸ்டா பதிவுகள் மூலம் அதிகம் வருவாய் ஈட்டும் பிரபலங்களின் பட்டியல் அண்மையில் வெளியாகியிருந்தது. இப்பட்டியலில் விராட் கோலி 14-வது இடத்தில் உள்ளதாகவும், அவர் ஒரு இன்ஸ்டா பதிவுக்கு இந்திய மதிப்பில் 11 கோடியே 45 லட்சம் ரூபாயை வருமானமாக பெறுவதாகவும் தகவல் வெளியாகியது.
இன்ஸ்டாவில் விராட் கோலி கோடி கோடியாக வருமானம் ஈட்டி வருவதாக பரவிய செய்தி ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்ஸ்டாகிராம் வருவாய் தொடர்பாக பரவிவரும் தகவல்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், “எனது வாழ்க்கையில் நான் பெற்ற அனைத்திற்கும் மிகுந்த நன்றியுடனும் கடன்பட்டவனாகவும் இருக்கிறேன். ஆனால் சமூக ஊடகங்களின் மூலமாக நான் ஈட்டும் வருமானம் குறித்து பரவும் செய்திகள் உண்மையில்லை” எனக் கூறியுள்ளார்.