Ind vs Pak: தவறான ஜெர்சியை அணிந்து களத்திற்கு வந்த விராட் கோலி! பின்னர் என்ன செய்தார் பாருங்கள்!

இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் விராட் கோலி ஒரு தவறான இந்திய ஜெர்சியை அணிந்து களத்திற்கு வந்தார்.
virat kohli
virat kohliTwitter

2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் மிகப்பெரிய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 1,20,000 இருக்கைகள் கொண்ட மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில், கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரசிகர்கள் இந்தப் போட்டியை காண குவிந்துள்ளனர்.

ind vs pak captains
ind vs pak captainstwitter

டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச முடிவு செய்தார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமும் நாங்களும் பந்துவீச தான் நினைத்தோம் என கூறினார். டாஸ்ஸில் பேசிய கேப்டன் ரோகித் சர்மா, ”இதை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது, அருமையான சூழல்” என்று கூற கூட்டம் ஆர்ப்பரித்தது. தொடர்ந்து பேசிய பாபர் அசாம், "முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றதால் நம்பிக்கையுடன் இருக்கிறோம். அதே மொமண்ட்டை எடுத்துச்செல்ல விரும்புகிறோம்" என கூறினார்.

ஜெர்சியை மாற்றி அணிந்து வந்த கோலி!

போட்டி தொடங்கிய போது இந்திய வீரர்கள் அனைவரும் அணிந்திருந்த ஜெர்சியின் தோள்பட்டை பகுதியில் மூவர்ண்ணங்கள் கொண்ட ஸ்டிரிப் இருந்தது. ஆனால் விராட் கோலியின் ஜெர்சி தோள்பட்டையில் மட்டும் மூன்று வெள்ளை கோடுகளால் ஆன ஸ்டிரிப் மட்டுமே இருந்தது. தெரியாமல் தவறுதலாக அணிந்து வந்த கோலி, பின்னர் போட்டியில் நடுவே அதை கண்டுபிடித்தார்.

கண்டுபிடித்த பிறகு மைதானத்தில் இருந்தே தன்னுடைய தோள்பட்டையை காட்டி ஜெர்சி வேண்டும் என கைக்காட்டினார். அதற்கு பிறகு மைதானத்தை விட்டு வெளியேறிய கோலி, மூன்று வண்ணங்கள் கொண்ட மாற்று ஜெர்சியை அணிந்துவந்து விளையாடினார்.

191 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்!

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் ஒரு ஸ்டிராங்கான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டை வீழ்த்த இந்திய வீரர்கள் சற்றே தடுமாறினர். 8 ஆவது ஓவரில் தான் முகமது சிராஜ் முதல் விக்கெட்டை சாய்த்தார். தொடர்ந்து ஒரு அற்புதமான அவுட்ஸ்விங் டெலிவரியில் இமாமை வெளியேற்றி இரண்டாவது விக்கெட்டை சாய்த்தார் ஹர்திக் பாண்டியா.

பாபர் - சிராஜ்
பாபர் - சிராஜ்

இதனையடுத்து பாபர் அசாம், ரிஸ்வான் ஜோடி இந்திய பந்துவீச்சாளர்களை சோதித்தது. இந்த ஜோடி நிலைத்து நின்று ரன்களை சீரான வேகத்தில் சேர்த்தது. இவர்கள் நின்றால் நிச்சயம் 300 ரன்களுக்கு மேல் பாகிஸ்தான் அடிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார் போல் தான் பாபர்-ரிஸ்வான் இருவரும் சிறப்பாக விளையாடினர்.

ind vs pak
ind vs pak

ஆனால் அரைசதம் அடித்த பாபர் அசாமை ஒரு கட்டர் டெலிவரியில் போல்டாக்கி வெளியேற்றிய சிராஜ், இந்தியாவை மீண்டும் ஆட்டத்திற்குள் எடுத்துவந்தார். ஸ்டிராங்காக ஆடிவந்த பாகிஸ்தான் ஆட்டத்தில் ஒரு கேம் சேன்ஜிங் மொமண்ட் விழ, அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக பவுலிங் ரொட்டேட் செய்தார்.

ind vs pak
ind vs pak

அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து அழுத்தம் அதிகமாக நிலைத்துநின்று விளையாடிய ரிஸ்வான் நிதானம் இழந்தார். அதை ஆயுதமாக மாற்றிய பும்ரா அவரை போல்டாக்கி வெளியேற்ற பாகிஸ்தான் அணி கலங்கிபோனது. பின்னர் வந்த வீரர்களை வெளியேற்றும் வேலையை குல்தீப்பும், ஜடேஜாவும் பார்த்துக்கொண்டனர். 42.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் 191 ரன்களுக்கு சுருண்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com