500 சர்வதேச போட்டிகள்: சச்சின், தோனியுடன் இணையும் விராட் கோலி

இன்று நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் மூலமாக விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 500 போட்டிகளில் விளையாடிய 4ஆவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைக்க உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இந்த தொடரில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு டெஸ்ட் நிறைவடைந்த நிலையில் அந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது

இதனிடையே, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குவதன் மூலம் இந்திய அணிக்காக 500 சர்வதேச போட்டிகளில் ஆடிய வீரர்களின் பட்டியலில் விராட் கோலி இணையுவுள்ளார். இந்திய அணியில் இந்த மைல்கல்லை எட்டும் நான்காவது வீரர் விராட் கோலி ஆவார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் 664 போட்டிகளுடன் முதலிடத்திலும், எம்.எஸ். தோனி 538 போட்டிகளுடன் இரண்டாவது இடத்திலும், ராகுல் டிராவிட் 509 போட்டிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com