\
மகளுடன் முகம்மது ஷமி
மகளுடன் முகம்மது ஷமிஇன்ஸ்டா

மகளுடன் ஷாப்பிங் சென்ற முகம்மது ஷமி.. இணையத்தில் வீடியோ வைரல்!

இந்திய அணியின் பிரபல பந்துவீச்சாளர் முகம்மது ஷமி, தனது மகளுடன் ஷாப்பிங் சென்ற வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரராக இருப்பவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முகம்மது ஷமி. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை இறுதிப்போட்டிவரை கொண்டுசென்றவர்.

முகமது ஷமி
முகமது ஷமிTwitter

இந்தத் தொடரில் இவருடைய பங்களிப்பு பெரிதாகப் பேசப்பட்டது. காயம் காரணமாக கிரிக்கெட் தொடர்களில் இருந்து விலகினார். முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டபின் ஓய்வில் இருந்த அவர், தற்போது பந்துவீச்சு பயிற்சியை தொடங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் விரைவில், இந்திய அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஷமி தன் மகளுடன் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஷாப்பிங் சென்ற வீடியோவை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் ஷமியும் அவரது மகள் ஆயிராவும் இணைந்து ஷாப்பிங் செய்வதைக் காண முடிகிறது.

இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள ஷமி, “நீண்ட நாட்களுக்குப் பிறகு என் மகளை மீண்டும் பார்த்தபோது என்னுடைய நேரம் உறைந்துவிட்டது. வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு உன்னை நேசிக்கிறேன் மகளே...” எனத் தெரிவித்துள்ளார். முகமது ஷமி தன் மனைவியை விவாகரத்து செய்த நிலையில், மனைவி மகளை பிரிந்து வாழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நீண்டநாட்களுக்குப்பின் மகளை சந்தித்துள்ளார்.

இதையும் படிக்க: ஈரான் வீசிய ஏவுகணைகள்... தப்பிக்க ஓடினாரா இஸ்ரேல் பிரதமர்? வைரல் வீடியோ.. உண்மை என்ன?

மகளுடன் முகம்மது ஷமி
சானியா மிர்சாவை திருமணம் செய்யப் போகிறேனா? முதல்முறையாக மவுனம் கலைத்த முகம்மது ஷமி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com