கிரிக்கெட் வரலாற்றில் முதல் தமிழன்.. NO.1 டி20 பவுலராக மாறி வருண் சக்கரவர்த்தி சாதனை!
26 வயதில் கிரிக்கெட்டை ஒரு கனவாக எடுத்துக்கொண்டு புறப்பட்ட வருண் சக்கரவர்த்தி, மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு 33 வயதில் இந்தியாவிற்காக அறிமுகம் பெற்ற அதிக வயதான வீரராக இந்திய அணிக்குள் நுழைந்தார்.
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பிடித்த வருண் சக்கரவர்த்தி 2025 சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வெல்ல முக்கிய காரணியாக இருந்தார்.
தற்போது இந்தியாவிற்காக ஆசியக்கோப்பையில் விளையாடிவரும் வருண் சக்கரவர்த்தி, ஐசிசி தரவரிசைப்பட்டியலில் நம்பர் 1 டி20 பவுலராக மாறி சாதனை படைத்துள்ளார்.
பும்ரா வரிசையில் இணைந்த வருண் சக்கரவர்த்தி..
ஆசியக்கோப்பை போட்டியில் யுஏஇ மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி டி20 பவுலர்கள் தரவரிசைப்பட்டியலில் 3 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
பும்ரா, ரவி பிஸ்னோய் போன்ற இந்திய பவுலர்களுக்கு பிறகு நம்பர் 1 டி20 ரேங்கிங் பெறும் 3வது இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்தார் வருண் சக்கரவர்த்தி.
ஒருநாள் பவுலர்கள் தரவரிசையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர் 16 இடங்கள் முன்னேறி 3வது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் தரவரிசையில் பும்ரா முதல் இடத்தை தக்கவைத்துள்ளார்.