அதிர்ச்சியிலிருந்து மீளுமா பாகிஸ்தான்? இந்திய அணியில் மாற்றங்கள் இருக்குமா? - IND v PAK பலப்பரிட்சை!

டி20 உலகக் கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி இன்று அரங்கேறவுள்ளது.
டி20 உலகக் கோப்பை
டி20 உலகக் கோப்பைமுகநூல்

வெற்றிப் பயணத்தைத் தொடருமா இந்தியா? பாகிஸ்தானுடன் பலப்பரிட்சை

போட்டி எண் 19: இந்தியா vs பாகிஸ்தான்

குரூப்: ஏ

மைதானம்: நசௌ கவுன்டி இன்டர்நேஷனல் ஸ்டேடியம், நியூ யார்க்

போட்டி தொடங்கும் நேரம்: ஜூன் 9, இந்திய நேரப்படி இரவு 8 மணி

இந்திய அணியில் மாற்றங்கள் இருக்குமா?

இந்திய அணி தங்கள் முதல் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக அபார வெற்றி பெற்றது. அயர்லாந்தை 96 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கிய இந்தியா, 12.2 ஓவர்களில் எளிதாக இலக்கை அடைந்தது. ஆர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா என 3 வேகப்பந்துவீச்சாளர்களுமே சிறப்பாகப் பந்துவீசினர். அதைவிட முக்கியமாக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பௌலிங்கில் சிறப்பாக செயல்பட்டார். 4 ஓவர்கள் வீசிய அவர், 27 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதில் ஒன்று மெய்டன் ஓவரும் கூட. ஹர்திக் உள்பட வேகப்பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டிருப்பது இந்திய அணிக்கு நல்ல விஷயம்.

மேலும் பேட்டிங்கில் கேப்டன் ரோஹித் ஷர்மா அரைசதம் அடித்து அசத்தினார். அவர் தசைப்பிடிப்பு காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் ஆனார். ஆனால் அது எந்த வகையிலும் அவர் இந்தப் போட்டியில் பங்கேற்பதில் பாதிக்கப்போவதில்லை. யாரும் எதிர்பாராத வகையில் மூன்றாவது வீரராக களமிறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கூட நன்றாகவே பேட்டிங் செய்தார்.

டி20 உலகக் கோப்பை
"வார்னரின் இடத்தை இவர் நிச்சயம் நிரப்புவார்" யாரைச் சொல்கிறார் பான்டிங்..!

என்ன இருந்தாலும், இடது கை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் களமிறங்குவது எப்போதுமே எதிர்பார்ப்புகளைக் கிளப்பியிருக்கிறது. பாகிஸ்தான் அணியில் ஷஹீன் அஃப்ரிடி, முகமது ஆமிர் என இரு இடது கை வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இது இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்குத் தலைவலியாக இருக்கும்.

அதிர்ச்சியிலிருந்து மீளுமா பாகிஸ்தான்?

பாகிஸ்தான் அணிக்கு இந்த உலகக் கோப்பை படுமோசமாகத் தொடங்கியிருக்கிறது. முதல் முறையாக டி20 உலகக் கோப்பையில் விளையாடும் அமெரிக்க அணிக்கு எதிராக 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது அந்த அணி. அவர்களின் பேட்டிங் அந்தப் போட்டியில் படுமோசமாக இருந்தது. ஆல் ரவுண்டர் ஷதாப் கான் மட்டுமே நன்றாக பேட்டிங் செய்து 40 ரன்கள் அடித்தார். பாபர் ஆசம் 44 ரன்கள் எடுத்திருந்தாலும், அதற்கு அவர் 43 பந்துகள் எடுத்துக்கொண்டார். இந்தப் போட்டியில் அவர் ஆடிய விதம் பெரும் விமர்சனங்களைக் கிளப்பியது. பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் மீண்டும் பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் ஆகியோர் ஓப்பனர்களாக இறங்கினார்கள்.

டி20 உலகக் கோப்பை
75 ரன்களுக்கு சுருண்டது நியூசிலாந்து... கேப்டனாக உலக சாதனை படைத்த ரஷித் கான்..

ஆனால் அதுவும் வேலைக்கு ஆகவில்லை. போக சமீபமாக கேள்விக்குள்ளாக்கப்படும் உஸ்மான் கான், ஆசம் கான் ஆகியோராலும் அதற்கு பதில் சொல்லும் வகையில் நல்ல இன்னிங்ஸ் ஆட முடியவில்லை. பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற வேண்டுமெனில் அவர்களின் பேட்டிங் சிறப்பாக செயல்பட்டாகவேண்டும்.

ஏற்கெனவே அமெரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தான் தோற்றிருப்பதால், அமெரிக்க அணி ஆடிய 2 போட்டிகளிலுமே வென்றிருப்பதால், பாகிஸ்தான் அணியின் நிலை சற்று மோசமாகவே இருக்கிறது. ஒருவேளை இந்தியாவுக்கு எதிராகத் தோற்றுவிட்டால் அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும். அதனால் பாகிஸ்தான் அணி இந்தப் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆகவேண்டும்.

பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்:

இந்தியா: ரோஹித் ஷர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, ஆர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.

பாகிஸ்தான்: பாபர் ஆசம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், உஸ்மான் கான், ஃபகர் ஜமான், ஷதாப் கான், ஆசம் கான் (விக்கெட் கீப்பர்), இஃப்திகார் அஹமது, ஷஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா, முகமது அமீர்.

டி20 உலகக் கோப்பை
“இந்த தோல்வி பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய அவமானம்” - முன்னாள் PAK வீரர் வேதனை!

கவனிக்கப்படவேண்டிய வீரர்கள்

இந்தியா - விராட் கோலி: ஐசிசி தொடர் என்றாலே விராட் கோலி வேறு லெவல் ஆட்டம் ஆடுவார். அதிலும் பாகிஸ்தான் அணி என்று வந்துவிட்டால் அவர் இன்னும் சிறப்பாக செயல்படுவார். நிச்சயம் கோலி ரசிகர்களுக்கு ஒரு விருந்து காத்திருக்கிறது.

பாகிஸ்தான் - ஷஹீன் அஃப்ரிடி - இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானின் இடது கை வேகப்பந்துவீச்சாளர்களை கவனிக்காமல் எப்படி விட முடியும்?! 2021 டி உலகக் கோப்பையில் இந்திய பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்தது போல் அவர் மீண்டும் ஒரு முறை செய்யக்கூடும்!

கணிப்பு: இரு அணிகளின் சமீபத்திய ஃபார்ம், அணியின் காம்பினேஷன் ஆகியவற்றையெல்லாம் கணக்கில் கொண்டால், இந்தியா மீண்டும் ஒருமுறை பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றியைப் பதிவு செய்யும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com