பெங்களூரில் இன்றிரவு 71% மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் கொடுத்த அப்டேட்! CSK vs RCB போட்டி நடக்குமா?

இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், ஆர்சிபி- சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், இன்று மழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ள சூழலில் ,பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
பெங்களூரு
பெங்களூரு முகநூல்

ஐபிஎல் தொடரின் இன்றையப் போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், ஆர்சிபி- சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், இன்று மழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ள சூழலில் ,பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கெனவே,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப்க்குள் நுழைந்துவிட்டன. இந்நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையப்போகும் 4 ஆவது அணி யார் என்பதற்கான ஆட்டம் இன்று நடைப்பெறுகிறது.

இந்த ஆட்டத்தில், ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணி அளவில் மோதுகின்றனர்.

இந்தநிலையில், இன்று 71 சதவீத மழைக்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, ”பெங்களூரில் இன்று இரவு 8 மணி முதல் 11 மணி வரை 71 சதவீதம் மழைப்பொழிவதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும், மாலை நேரத்தில் மழைப் பெய்ய 55 சதவீதமும், இடியுடன் கூடிய மழை பெய்ய 33 சதவீதமும் வாய்ப்பு உள்ளது.100 சதவீத மேக மூட்டத்துடன் காணப்படும்” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் போட்டிக்கு இடையில் மழைக்கான குறுக்கீடு இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது, இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் சென்னை அணி 7 போட்டிகளிலும், பெங்களூரு அணி 6 போட்டிகளிலும் இதுவரை வெற்றி பெற்றுள்ளன. இதில், சென்னை அணி அடுத்த சுற்றில் நுழைய பெங்களூரை வீழ்த்தினாலே போதுமானது. ஆனால், பெங்களூரு சென்னை அணியை வீழ்த்த வேண்டுமானால் 18 ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 11 பந்துகளை மீதம்வைத்தோ வீழ்த்த வேண்டும்.

பெங்களூரு
CSK Vs RCB | மே18 80% மழைக்கு வாய்ப்பு இருக்கு.. ஒருவேளை மழை குறுக்கிட்டால் என்னவெல்லாம் நடக்கலாம்!

மேலும், புள்ளிப் பட்டியலில் சென்னை அணியின் ரன் ரேட் +0.528 ஆக உள்ளது. பெங்களூரு அணியின் ரன் ரேட் +0.387 ஆக உள்ளது. இதனால் மழை காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டால், ரன்ரேட் அடிப்படையில் சென்னை அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில், மழை காரணமாக ஆட்டத்தில் ஓவர்கள் குறைக்கப்படும் பட்சத்தில் பெங்களூரு அணிக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, குஜராத் டைட்டன்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையே போட்டியும் மழையின் குறுக்கீட்டால் ரத்து செய்யப்பட்டது. இதனால், 15 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆணி 3 ஆவது அணியாக நுழைந்துள்ளது. இந்தநிலையில், 4 ஆம் அணியாக யார் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறுபவர் யார் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com