CWG 2026 | பளுதூக்குதல் போட்டி.. வெள்ளி வென்று சாதனை படைத்த தமிழக வீரர்!
ஆண்களுக்கான பளுதூக்கும் பிரிவில் ராஜா முத்துப்பாண்டி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளார் .
2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் போட்டியில் இந்திய விளையாட்டு வீரர் ராஜா முத்துப்பாண்டி வெள்ளி பதக்கம் வென்று சாதனை படத்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 வயது ராஜா, ஸ்நாட்சி பிரைவில் 126 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 160 கிலோவும் தூக்கி இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.
வெற்றி குறித்து ANI செய்தி நிறுவனத்திடம் பேசியிருக்கும் ராஜா முத்துபாண்டி, ”நான் எதிர்பார்த்த அளவுக்குச் செயல்படவில்லை என்றும் இந்த வெற்றியை என் பெற்றோருக்கும் என் பயிற்சியாளர் விஜய் சர்மாவுக்கும் சமர்பிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
பிரதமர், முதல்வர் வாழ்த்து
ராஜா முத்துப்பாண்டி பதக்கம் வென்றது, இந்திய மக்களை மகிழ்ச்சியும், பெருமையும் அடையச் செய்துள்ளதாக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராஜா முத்துப்பாண்டிக்கு முதல்வர் விஜயும் வாழ்த்து தெரிவித்துள்ளார். கூடவே ராஜா முத்துப்பாண்டியின் சாதனையை பாராட்டி அரசு சார்பில் 30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பும் வெளியிட்டுள்ளார். .

