\
The World Cup 2026 Extravaganza Package at The Mark Hotel
fifa wcx page

FIFA 2026 | அதிரடி ஆஃபர்.. உலகக்கோப்பைக்காக 8.3 கோடி ரூபாய் சொகுசுத் திட்டம்!

உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவை முன்னிட்டு, நியூயார்க்கின் பிரபல தி மார்க் ஹோட்டல் பலரையும் விழியுயர்த்த வைக்கும் பேக்கேஜ் ஒன்றை அறிவித்துள்ளது.
Published on

உலகக் கோப்பை கால்பந்தின் இறுதி ஆட்டத்தை நேரில் காண விரும்பும் பெரும் பணக்காரர்களுக்கு, கவர்ந்திழுக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அமெரிக்காவின் பிரபல சொகுசு விடுதி நிர்வாகம். நியூயார்க்கின் பிரபல தி மார்க் ஹோட்டல் பலரையும் விழியுயர்த்த வைக்கும் பேக்கேஜ் ஒன்றை அறிவித்துள்ளது. அதன் விலை எவ்வளவு தெரியுமா? இந்திய மதிப்பில் சுமார் 8.3 கோடி ரூபாய். உலகக்கோப்பை எக்ஸ்ட்ராவாகன்சா என்ற பெயரில் 4 நாட்களுக்கான சுற்றுலாத் தொகுப்பை அந்நிறுவனம் வழங்குகிறது.

நியூயார்க்கிலிருந்து நியூ ஜெர்சி மைதானத்திற்குச் செல்லப் போக்குவரத்து நெரிசல் இல்லாத விஐபி ஹெலிகாப்டர் பயணம், மைதானத்தின் மையக்கோட்டுக்கு அருகில் 6 விஐபி டிக்கெட்டுகள் மற்றும் உங்களுக்கென பிரத்யேக சொகுசு அறை ஆகியவை இதில் அடங்கும். அங்கு உலகத்தரம் வாய்ந்த உணவுகள், ஒயின்கள் மற்றும் ஷாம்பெயின் வழங்கப்படும். ஹட்சன் நதியில் உள்ள சுதந்திர தேவி சிலையைச் சுற்றி வரத் தனிப் படகு வசதி, 24 மணிநேரமும் உங்களுக்காகவே பணிபுரியும் பணியாளர்கள், மொட்டை மாடியில் உயர்தர உணவுத் திருவிழா எனப் பட்டியல் நீள்கிறது. வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வரும் வாய்ப்பு, பணம் இருந்தால் தாராளமாகச் செய்யலாம் என ஒருதரப்பும், கால்பந்து போட்டியை ரசிக்க இவ்வளவு ஆடம்பரம் தேவையில்லை என நடுத்தர வர்க்கத்தினரும் கலவையான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com