Pakistan tri series 2025
new zealand - south africa - pakistanweb

லாகூர் | பாகிஸ்தான், தென்னாப்ரிக்கா, நியூசிலாந்து மோதும் முத்தரப்பு தொடர்.. நாளை PAK vs NZ மோதல்!

6 வருடங்களுக்கு பிறகு மூன்று கிரிக்கெட் அணிகள் பங்குபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடரானது பாகிஸ்தானில் நடைபெறவிருக்கிறது.
Published on

எப்படி ஐசிசி தொடர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறதோ, அதேஅளவு மூன்று அணிகள் ஒன்றோடொன்று மோதும் முத்தரப்பு தொடருக்கும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பும், ஆதரவும் அதிகமாகவே இருந்தது.

ஐசிசியின் ஆண்டு சுழற்சி அட்டவணையை தான்டி, ஒவ்வொரு நாட்டிலும் உருவாகியிருக்கும் டி20லீக் போட்டிகள் கலாச்சாரமானது மூன்று அணிகள் பங்குபெறும் முத்தரப்பு தொடர் என்பதையே கேள்விக்குறியாக்கிவிட்டது.

tri series
tri series

கடைசியாக 2019-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகள் முத்தரப்பு தொடரில் பங்கேற்றன. அது டி20 போட்டிகளாக நடத்தப்பட்டது.

இந்நிலையில் அதற்குபிறகு முத்தரப்பு தொடர் நடைபெறாத நிலையில் 6 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் மோதும் முத்தரப்பு தொடரானது ஒருநாள் போட்டிகளாக நடக்கவிருக்கிறது.

பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் முத்தரப்பு தொடர்..

பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து என மூன்று முழுநேர கிரிக்கெட் நாடுகள் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு முத்தரப்பு தொடரில் விளையாடுகின்றன. அதுவும் இந்த போட்டிகள் பாகிஸ்தானில் லாகூர் மற்றும் கராச்சியில் நடைபெறவிருக்கிறது.

மூன்று அணிகளும் மற்ற அணிகளோடு தலா ஒரு போட்டி என இரண்டு போட்டிகளில் மோதுகின்றன. இதில் அதிக வெற்றிகளை பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதவிருக்கின்றன.

முதலிரண்டு லீக் போட்டிகள் லாகூரிலும், கடைசி லீக் போட்டி மற்றும் இறுதிப்போட்டி கராச்சியிலும் நடக்கவிருக்கின்றன. நாளை நடைபெறவிருக்கும் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவிருக்கின்றன. போட்டி மதியம் 2.30 மணிக்கு நடைபெறவிருக்கிறது.

17 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் அணி முத்தரப்பு தொடரில் பங்கேற்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com