டி20, டெஸ்ட், ODI என மூன்றிலும் நம்பர் 1! உலக கிரிக்கெட்டில் புதிய சரித்திரம் படைத்த இந்திய அணி!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றதை அடுத்து ODI தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது இந்திய அணி.
Indian Team
Indian TeamTwitter

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. தொடரின் முதல் போட்டியானது மொஹாலியில் இன்று நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியை தன்னுடைய சிறப்பான பந்துவீச்சு மூலம் 276 ரன்களில் கட்டுப்படுத்தினார் முகமது ஷமி. பேட்டிங்கை பொறுத்த வரையில் டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடி அரைசதம் (52 ரன்கள்) அடித்தார். பந்துவீச்சை பொறுத்தவரையில் முகமது ஷமி 10 ஓவரில் 51 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Shami - Warner
Shami - WarnerTwitter

277 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணியில் தொடக்க ஆட்டகாரர்களான ருதுராஜ் கெய்க்வாட் (71 ரன்கள்) மற்றும் சுப்மன் கில் (74 ரன்கள்) இருவரும் முதல் விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்தனர். கில், கெய்க்வாட்டை தொடர்ந்து கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் சூர்யகுமார் இருவரும் அரைசதத்தை பதிவு செய்தனர். இந்திய அணியில் 4 வீரர்கள் அரைசதம் அடிக்க 48.4 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா.

டி20, டெஸ்ட், ODI என மூன்றிலும் நம்பர் 1! சாதனை படைத்த இந்தியா!

முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதை அடுத்து ODI தரவரிசை பட்டியலில் 117 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அசத்தியது இந்திய அணி. ஏற்கனவே டி20 (264 புள்ளிகள்), டெஸ்ட் (118 புள்ளிகள்) என இரண்டு வடிவத்திலும் முதலிடம் வகிக்கும் இந்திய அணி, தற்போது ஒடிஐ-லும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

Asia Cup Final 2023
Asia Cup Final 2023Twitter

இதன் மூலம் டி20, டெஸ்ட், ODI என மூன்றிலும் முதலிடம் பிடித்திருக்கும் இந்தியா, கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல் சாதனை படைத்துள்ளது. உலக கிரிக்கெட் வரலாற்றில் மூன்று வடிவத்திலும் ஒரு அணி முதலிடத்தை பிடிப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன் 2012-ல் தென்னாப்பிரிக்க அணி இந்த சாதனையை படைத்திருந்தது.

KL Rahul
KL Rahul

ஒடிஐ கிரிக்கெட்டை பொறுத்தவரையில் பாகிஸ்தான் அணி முதலிடத்தில் வகித்து வந்தது. ஆனால் ஆசிய கோப்பையில் இறுதிப்போட்டிக்கு செல்லாததையடுத்து பாகிஸ்தான் புள்ளிகளில் முன்னேற்றம் இல்லாமல் இருந்தது. ஒருவேளை இந்த போட்டியில் இந்தியாவிற்கு பதில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றிருந்தால், ஆஸ்திரேலியா நம்பர் ஒன் ஒடிஐ அணியாக மாறியிருக்கும். இந்நிலையில் தொடர்ந்து இந்திய அணி முதலிடத்தில் நீடிக்க வேண்டும் என்றால் அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும். ஒருவேளை அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெறும் பட்சத்தில் ஆஸ்திரேலியா அணியும், தொடரை 2-1 என இந்தியா வென்றால் கூட பாகிஸ்தான் அணியும் முதலிடத்திற்கு முன்னேறும். இந்தியா இந்த மைல்கல் சாதனையை தக்கவைத்து கொள்ள தொடரை முழுமையாக கைப்பற்ற வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com