தென்னாப்பிரிக்காவில் தலையில் பெட்டியைச் சுமந்தபடி ஓடிய இந்திய வீரர்கள்.. வைரல் வீடியோ!

தென்னாப்பிரிக்காவில் இந்திய வீரர்கள் தலையில் பெட்டியைச் சுமந்தபடி ஓடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
india players
india playerstwitter

உலகக்கோப்பைக்குத் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவை டி20 தொடரில் சந்தித்தது. 5 போட்டிகளில் கொண்ட இந்த தொடரில், 4-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்த நிலையில், அடுத்து இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையிலான போட்டிகளில் விளையாட இருக்கிறது.

இதற்காக தனித்தனி கேப்டன்களும், வீரர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், டிசம்பர் 10ஆம் தேதி, தென்னாப்பிரிக்காவில் தொடங்க இருக்கிறது. இதற்கான சூர்யகுமார் தலைமையிலான இளம்படை, இன்று தென்னாப்பிரிக்கா சென்றடைந்தது. டர்பன் நகரில் இந்திய வீரர்களுகு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், பிசிசிஐ சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், இந்திய வீரர்கள் தங்களது உடைமைகள் இருக்கும் பெட்டியைத் தலையில் தூக்கிவைத்து ஓடுகின்றனர். இந்த காட்சிதான் பதிவு செய்யப்பட்டு வைரலாகி வருகிறது. அதாவது, வீரர்கள் இறங்கியபோது டர்பன் நகரில் மழை கொட்டியுள்ளது. அதிலிருந்து தப்பிப்பதற்காக, அவர்கள் தங்களது பெட்டிகளை தலைமேல் குடையாகப் பிடித்தப்படி ஓடுகின்றனர். இந்த காட்சியைத்தான் பிசிசிஐ தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க: மீண்டும் ஓர் எல்லை தாண்டிய காதல்: ஐந்தரை ஆண்டு காத்திருப்புக்குப் பின் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com