Mohamedpt desk
கிரிக்கெட்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: குஜராத் உடனான முதல் போட்டியில் தமிழ்நாடு தோல்வி!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதலாவது ஆட்டத்தில் தமிழ்நாடு அணி குஜராத்திடம் தோல்வியை தழுவியது.
ரஞ்சி கோப்பையில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு - குஜராத் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் வல்சத்தில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்ஸில் குஜராத் 236 ரன்களும், தமிழ்நாடு 250 ரன்களும் எடுத்தன. 14 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய குஜராத் 312 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் தமிழ்நாடு அணிக்கு 299 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
TN vs GUJpt desk
இதைத தொடர்ந்து களமிறங்கிய தமிழ்நாடு அணி 187 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 111 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றது.
அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக அர்சான் நாக்வாஸ் வல்லா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 89 ஆவது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் மோதி வருகின்றன.