இரட்டை சதத்தை நோக்கி சூர்யவன்ஷி.. பறந்த 14 சிக்சர்கள்.. 163* ரன்களுடன் பேட்டிங்!
யு19 ஆசியக்கோப்பையில் இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி 56 பந்தில் சதமடித்து அசத்தியுள்ளார். 14 சிக்சர்கள், 8 பவுண்டரிகளுடன் 180 ஸ்டிரைக்ரேட்டில் 159* ரன்களுடன் விளையாடி, முதல் இரட்டை சதத்தை நோக்கி முன்னேறுகிறார். இந்த ஆட்டம் துபாயில் உள்ள ஐசிசி அகாடமி கிரவுண்டில் நடைபெற்றது.
2025 யு19 ஆசியக்கோப்பை தொடர் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாள், மலேசியா, யுஏஇ, இலங்கை உள்ளிட்ட 8 அணிகளுக்கு இடையே இன்று டிசம்பர் 12 முதல் டிசம்பர் 21ஆம் தேதிவரை துபாயில் நடைபெறுகிறது.
இன்று நடைபெறும் இரண்டு போட்டிகளில் இந்திய அணி யுஏஇ அணியையும், பாகிஸ்தான் அணி மலேசியாவையும் எதிர்த்து விளையாடுகின்றன.
56 பந்தில் சதமடித்த சூர்யவன்ஷி..
துபாயில் உள்ள ஐசிசி அகாடமி கிரவுண்டில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்து விளையாடிவரும் இந்திய அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி வழக்கம்போல தன்னுடைய அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
9 சிக்சர்கள் 5 பவுண்டரிகளை நாலாபுறமும் சிதறடித்த சூர்யவன்ஷி 56 பந்தில் சதமடித்து அசத்தினார். தொடர்ந்து தன்னுடைய ஹிட்டிங் பேட்டிங்கை வெளிப்படுத்திவரும் சூர்யவன்ஷி 14 சிக்சர்களை பறக்கவிட்டு 180 ஸ்டிரைக்ரேட்டில் 163* ரன்களுடன் பேட்டிங் செய்துவருகிறார். முதல் இரட்டை சதத்தை பதிவுசெய்வாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
யூத் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 332 ரன்களையும், இந்தியா ஏ அணிக்காக 42 பந்துகளில் 142 ரன்களையும், ஐபிஎல்லில் 35 பந்தில் சதமடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது..

