கில் - சூர்யகுமார்
கில் - சூர்யகுமார்pt

கில்லுக்கு செல்கிறதா t20 கேப்டன் பொறுப்பு? என்ன சொல்கிறார் சூர்யகுமார் யாதவ்?

இந்திய டி20 அணியின் கேப்டனாக இருந்துவரும் சூர்யகுமார் யாதவ், தன்னுடைய கேப்டன் பதவி சுப்மன் கில்லால் ஆபத்தில் இருப்பதாக ஒப்புக்கொண்டார்..
Published on

2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்றுகொடுத்த ரோகித் சர்மா, இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து விலகிய பிறகு, டெஸ்ட் மற்றும் ஒருநாள் இரண்டு வடிவத்திற்கும் சுப்மன் கில் கேப்டனாக இருந்துவருகிறார்..

2024 டி20 உலகக்கோப்பை வென்ற பிறகு இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் இருந்துவரும் நிலையில், சுப்மன் கில்லை 3 வடிவத்திற்கும் கேப்டனாக்கும் முயற்சியில் இந்திய அணியின் தேர்வுக்குழு இருந்துவருகிறது..

கேப்டனாக சுப்மன் கில் மோசமான சாதனை
கேப்டனாக சுப்மன் கில் மோசமான சாதனைweb

2026 டி20 உலகக்கோப்பை வெல்வதை குறிக்கோளாக கொண்டு சிறப்பாக கேப்டன்சி செய்துவரும் சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில்லிடம் டி20 கேப்டன்சி பறிபோகும் என்ற பயம் இருகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்துப் பேசியிருக்கிறார்.

கில் - சூர்யகுமார்
’இனி வாய்ப்பே இல்லை..’ CSK செய்த மிகப்பெரிய தவறு.. பதிரானா-க்கு போட்டிப்போடும் 5 அணிகள்!

பயத்தை எப்போதோ விட்டுவிட்டேன்..

சுப்மன் கில்லிடம் டி20 கேப்டன்சி செல்லும் என்ற பயம் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கும் சூர்யகுமார் யாதவ், ”அந்த பயத்தை நான் எப்போதோ விட்டுவிட்டேன், அவருக்கும் எனக்கும் இடையேயான நட்பு அற்புதமாக இருக்கிறது.. அவர் எப்படிப்பட்ட வீரர் மற்றும் மனிதர் என்பது எனக்கு நன்றாக தெரியும்.. அதனால் என்னால் என்ன செய்யமுடியும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.. மேலும் அவருடைய வளர்ச்சியில் நான் மகிழ்கிறேன்.. அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்” என்று பேசியுள்ளார்.

கில் - சூர்யகுமார்
One Man | ஜடேஜா வெளியேறினால் 8 ஓட்டைகள் விழும்.. CSK-க்கு இவ்வளவு பிரச்னைகளா??
சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்web

மேலும் தன்னை பவுலர்களின் கேப்டன் என குறிப்பிட்ட சூர்யா, “போட்டியில் அழுத்தமான நேரங்களில் கூட நான் நிதானமாக இருக்கிறேன், ஃபீல்டிங்கின் போது பந்துவீச்சாளர்களிடம் புன்னகைக்கிறேன். பவுலர்கள் தங்களுடைய கருத்தை சொல்லவேண்டும், ஏனென்றால் அழுத்தமான நேரங்களில் அவர்கள் மனதில் நிறைய ஓடிக்கொண்டிருக்கும், நாம் அவற்றை காதுகொடுத்து கேட்க வேண்டும்.. ஒவ்வொருவரும் வித்தியாசனமான அனுபவங்களை கொண்டுவருகிறார்கள், அணி சிறப்பாக இருக்கிறது” என்று பேசியுள்ளார்..

கில் - சூர்யகுமார்
LOYALTY-க்கு வேலை இல்ல | CSK to SRH.. தூணாக நின்ற வீரர்களையே தூக்கியெறிந்த 5 அணிகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com