சர்ரே அணி 820 ரன்கள் குவிப்பு
சர்ரே அணி 820 ரன்கள் குவிப்புX

3 வீரர்கள் சதம்.. ஒருவர் மட்டும் 300 ரன்! 820 ரன்கள் குவிப்பு! 126 ஆண்டுகால வரலாற்றில் முதல் அணி!

கவுண்டி சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டியில் 820 ரன்கள் குவித்து புதிய வரலாறு படைத்துள்ளது சர்ரே அணி.
Published on

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிசன் ஒன் போட்டியில் சர்ரே மற்றும் டர்ஹாம் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த சர்ரே அணி முதல் இன்னிங்ஸில் 820/9 ரன்கள் குவித்து டிக்ளார் செய்தது. தன்னுடைய தொழில்முறை கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்களை குவித்த டொமினிக் சிப்லி 305 ரன்கள் குவித்து மிரட்டிவிட்டார்.

அவருடன் சேர்ந்து டான் லாரன்ஸ் (178), வில் ஜாக்ஸ் (119) மற்றும் சாம் கரன் (108) மூன்று வீரர்களும் சதமடிக்க, 126 ஆண்டுக்கு பிறகு கவுண்டி சாம்பியன்ஷிப் வரலாற்றில் புதிய சாதனையை படைத்தது சர்ரே அணி. அதுமட்டுமில்லாமல் கவுண்டி சாம்பியன்ஷிப்பில் சர்ரே அணி பதிவுசெய்த அதிகபட்ச இன்னிங்ஸ் ஸ்கோர் இதுவாகும்.

முதல் அணியாக வரலாறு படைத்தது சர்ரே..

டர்ஹாம் அணிக்கு எதிரான போட்டியில் 800 ரன்களுக்கு மேல் அடித்த சர்ரே அணி, கவுண்டி சாமியன்ஷிப் வரலாற்றில் 2 முறை 800 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே அணி என்ற சாதனையை படைத்து அசத்தியுள்ளது.

இதற்கு முன்பு சர்ரே அணியின் முந்தைய சிறந்த இன்னிங்ஸ் ஸ்கோர் 811 ஆகும். இது 126 ஆண்டுகளுக்கு முன்பு 1899-ல் இதே மைதானத்தில் சோமர்செட்டுக்கு எதிராக அடிக்கப்பட்டது.

கவுண்டி சாம்பியன்ஷிப்பில் ஒரே இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த அணி:

* 887 - யார்க்ஷயர் (YOR) vs வார்விக்ஷயர் (WAR) - பர்மிங்காம் - 1896

* 863 - லங்காஷயர் (LAN) vs சர்ரே (SUR) - தி ஓவல் - 1990

* 850/7 - சோமர்செட் (SOM) vs மிடில்செக்ஸ் (MID) - டவுண்டன் - 2007

* 820/9 - சர்ரே (SUR) vs டர்ஹாம் (DUR) - தி ஓவல் - 2025

* 811 - சர்ரே (SUR) vs சோமர்செட் (SOM) - தி ஓவல் - 1899

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com