IND vs ENG | கமெண்ட்ரியில் இருந்து பாதியில் வெளியேறிய கவாஸ்கர் - பின்னணியில் சோகமான நிகழ்வு!

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சுனில் கவாஸ்கர் கமெண்ட்ரி செய்து கொண்டிருந்தார். கமெண்ட்ரி செய்து கொண்டிருந்தவர் திடீரென பாதியில் கிளம்பிச் சென்றுவிட்டார். பின்னணியில் சோகமான நிகழ்வு இருந்தது.
சுனில் கவாஸ்கர்
சுனில் கவாஸ்கர் PT WEB

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வாலின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்துள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இந்திய அணியில் கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகியோருக்கு மாற்றாக ரஜத் பட்டிதார், குல்தீப் யாதவ் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் ஜேக் லீச் மற்றும் மார்க் வுட்டிற்கு மாற்றாக சோயப் பஷிர் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் களம் கண்டனர். இந்தியாவின் ரஜத் பட்டிதார், இங்கிலாந்தின் சோயப் பஷிர் ஆகியோருக்கு இது அறிமுகப் போட்டியாகும்.

இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 14, சுப்மன் கில் 34 ரன்களில் ஆட்டமிழந்தபோதும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்தார். பின்னர் வந்த வீரர்களில் அறிமுக வீரர் ரஜத் பட்டிதார் மட்டும் 32 ரன்கள் எடுத்தார். ஸ்ரேயாஸ் மற்றும் அக்சர் இருவரும் தலா 27 ரன்களை எடுத்தனர். ஒருபக்கம் விக்கெட்கள் விழுந்தாலும் மறு முனையில் அடிக்க வேண்டிய பந்துகளை எல்லைக்கோடுகளுக்குப் பறக்க விட்ட ஜெய்ஸ்வால் 94 ரன்களில் இருந்து சிக்சர் ஒன்றைப் பறக்கவிட்டு சதம் அடித்தார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 336 ரன்களை எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 17 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் உதவியுடன் 179 ரன்களுடனும், ரவிச்சந்திரன் அஸ்வின் 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்தின் சோயப் பஷிர், ரெஹான் அஹ்மது ஆகியோர் தலா இரு விக்கெட்களை வீழ்த்தினர்.

சுனில் கவாஸ்கர்
கரூர்: தொடர்ந்து 5 மணி நேரம் ஸ்கேட்டிங் - 3 வயது சிறுமி உலக சாதனை

இந்தப் போட்டியின் போது இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சுனில் கவாஸ்கர் கமெண்ட்ரி செய்து கொண்டிருந்தார். கமெண்ட்ரி செய்து கொண்டிருந்தவர் திடீரென பாதியில் கிளம்பிச் சென்றுவிட்டார். எதனால் அவர் பாதியில் சென்றார் என்பது அப்பொழுது தெரியவில்லை. ஆனால், பின்னணியில் சோகமான நிகழ்வு இருந்தது பின்னர் தெரியவந்தது. ஆம், கவாஸ்கரின் மாமியார் புஷ்பா மெஹ்ரோத்ரா இறந்துவிட்டார் என்ற தகவலை முன்னாள் வீரர்கள் பலரும் தெரிவித்து இருந்தனர். தகவல் கிடைத்ததும் கான்பூருக்கு கவாஸ்கர் விரைந்து சென்றார்.

முன்னதாக, 2022 ஆம் ஆண்டு டாக்கா நகரில் இந்தியா - பங்களாதேஷ் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கவாஸ்கர் கமெண்ட்ரி செய்து கொண்டிருந்த போது தான் அவரது தாயார் மீனா உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com