சூப்பர் 4 சுற்று| 2 முக்கியமான விசயங்களை IND செய்ய வேண்டும்.. சுனில் கவாஸ்கர் அறிவுரை!
17வது ஆசிய கோப்பை தொடரானது யுஏஇ-ல் உள்ள துபாய் மற்றும் அபுதாபி மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன், ஹாங்காங் முதலிய 8 அணிகள் இரண்டு குழுக்களாக லீக் போட்டிகளில் விளையாடிய நிலையில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் முதலிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.
இதில் ஒரு அணி மற்ற 3 அணிகளுடன் தலா ஒருமுறை மோதும் நிலையில், முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.
இந்நிலையில் சூப்பர் 4 போட்டிகளுக்கு முன்னதாக இன்று இந்தியா ஓமனுக்கு எதிராக கடைசி லீக் போட்டியில் விளையாடுகிறது. இதனை பயன்படுத்தி இந்திய அணி சில முக்கியமான விசயங்களை செய்யவேண்டும் என சுனில் கவாஸ்கர் அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்த விசயங்களை இந்தியா செய்யவேண்டும்..
சூப்பர் 4 சுற்றுப் போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகளை எதிர்கொண்டு விளையாடவிருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக நாளை மறுநாள் இந்தியா மோதவிருக்கும் நிலையில், ஓமன் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் பும்ராவிற்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் அறிவுரை வழங்கியுள்ளார்.
2 விசயங்களை இந்தியா பின்பற்ற வேண்டும் என கூறியிருக்கும் கவாஸ்கர், பாகிஸ்தானுக்கு எதிராகவும் பும்ரா ஓய்வில் இருக்கவேண்டும், முக்கிய போட்டிகளான இலங்கை மற்றும் வங்கதேச போட்டிகளுக்கு தயாராக வேண்டும். அதேபோல இந்தியா முதல் பேட்டிங் எடுத்து திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு டாப் ஆர்டரில் பேட்டிங் செய்ய அனுமதிக்க வேண்டும். இது பின்வரும் காலங்களில் வீரர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.