“ஐசிசி விதித்த தடையால் நஷ்டம் ஏற்படும்” - இலங்கை கிரிக்கெட் ஆணையத் தலைவர் ஷம்மி சில்வா

“இலங்கை கிரிக்கெட்டுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி விதித்துள்ள தடை காரணமாக சுமார் 100 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்படும்” - இலங்கை கிரிக்கெட் ஆணையத் தலைவர் ஷம்மி சில்வா
ஐசிசி, இலங்கை
ஐசிசி, இலங்கைபுதிய தலைமுறை

இலங்கை கிரிக்கெட்டுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி விதித்துள்ள தடை காரணமாக சுமார் 100 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்படுமென இலங்கை கிரிக்கெட் ஆணையத் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் ஆணையத் தலைவர் ஷம்மி சில்வா
இலங்கை கிரிக்கெட் ஆணையத் தலைவர் ஷம்மி சில்வா

அவர் பேசுகையில், “இலங்கை கிரிக்கெட்டுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி விதித்துள்ள தடை காரணமாக, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டிகளின் இடமாற்றம் மற்றும் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் நடைபெறவிருந்த ஐ.சி.சி.யின் வருடாந்திர மாநாடு ஆகியவற்றை இழந்துள்ளோம். இதனால் சுமார் 100 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்படும்.

ஐ.சி.சி.யின் தடைக்கு மத்தியில் இலங்கை அணி இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெற முடியும். ஆனால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை இலங்கையில் நடத்த முடியாது

இலங்கை கிரிக்கெட் ஆணையத் தலைவர் ஷம்மி சில்வா

srilanka
srilankapt web

எதிர் காலத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவராக நீடிப்பதை எதிர்ப்பார்க்கவில்லை. எதிர் காலத்தில் இந்தப் பதவி, பொறுப்பேற்கும் குழு உறுப்பினர்களால் தீர்மானிக்கப்படும். ‘கிரிக்கெட் தடைக்கு காரணம் முற்றிலும் அரசியல் அழுத்தம்’ என்று கூட்டத்தின்போது ஐசிசி கூறியது. நாங்கள் அதற்கு, ‘வாய்ப்பை வழங்குங்கள், இல்லையேல் நாங்கள் முற்றிலும் வீழ்வோம்’ என்று கூறினோம். இருப்பினும் தடை வந்துவிட்டது. இது முழுக்க முழுக்க அரசியல் செல்வாக்குதான் என்பதை அவர்கள் புரிந்து கொண்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

ஐசிசி, இலங்கை
“20 ஒவர் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவது குறித்து முடிவு செய்ய ரோகித், கோலிக்கு அதிகாரம்” - BCCI

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com