18 வயதுவரை கற்றுக்கொண்ட கிரிக்கெட் பலனளிக்கவில்லை! கோலியை பின்பற்றிய பிறகு தான்.. SA வீரர் பகிர்வு!

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்த டேவிட் பெடிங்காம், விராட் கோலி மற்றும் ரோகித் தான் தன்னுடைய கிரிக்கெட்டையே மாற்றியது என கூறியுள்ளார்.
விராட் கோலி - டேவிட் பெடிங்காம்
விராட் கோலி - டேவிட் பெடிங்காம்PT

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்று வரலாறு படைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. 31 ஆண்டுகால கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க மண்ணில் ஒருதொடரை கூட வெல்லமுடியாமல் சொதப்பி வரும் இந்திய அணி, இந்த முறை ரோகித் சர்மா தலைமையில் வரலாற்றை மாற்றி எழுதும் என்ற நம்பிக்கை அதிகமாகவே இருந்தது.

இந்திய அணியில் பந்துவீச்சு சிறப்பாக இருந்ததால் இந்த முறை எல்லாம் கைக்கூடி வரும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை சோதித்த டேவிட் பெடிங்காம் மற்றும் டீன் எல்கர் கூட்டணி, இந்திய அணியின் கையிலிருந்த போட்டியை தட்டிப்பறித்தது.

113 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இருந்தபோது இந்த கூட்டணி 4வது விக்கெட்டுக்கு 131 ரன்கள் சேர்த்தது. எல்கருடன் அற்புதமான பார்ட்னர்ஷிப் போட்ட பெடிங்காம், 87 பந்தில் 7 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 56 ரன்கள் எடுத்து நல்ல இன்னிங்ஸை பதிவுசெய்தார். அதன்பின் 408 ரன்களை குவித்த தென்னாப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

virat kohli
virat kohli

இந்நிலையில் தன்னுடைய பேட்டிங் குறித்து பேசியிருக்கும் பெடிங்காம், அவருடைய பேட்டிங் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாதான் என்று தெரிவித்துள்ளார்.

சிறுவயதில் என்னுடைய பேட்டிங் மோசமானதாக இருந்தது! - பெடிங்காம்

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி குறித்து பிடிஐ உடன் பேசியிருக்கும் டேவிட் பெடிங்காம், “எனக்கு பிடித்த இரண்டு இந்திய கிரிக்கெட் வீரர்கள் என்றால் அது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா மட்டும்தான். நான் என்னுடைய 13 வயது முதல் 18 வயதிற்குள் இருந்தபோது, ​​​​முன்னாள் வீரர்கள் ஜேக் காலிஸ் மற்றும் கிப்ஸின் பேட்டிங் டெக்னிக்கைதான் பின்பற்ற முயற்சித்தேன். ஆனால் அது எனக்கு பலனளிக்கவில்லை. அதன்பிறகு என்னுடைய பேட்டிங்கில் நான் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் டெக்னிக்கை பின்பற்ற ஆரம்பித்தேன். பிறகு எல்லாம் கைக்கூடி வந்தது” என்று பெடிங்ஹாம் கூறியதாக PTI மேற்கோள் காட்டியுள்ளது.

David Bedingham
David Bedingham

மேலும் பும்ரா குறித்து பேசியிருக்கும் அவர், ”நான் அதிக பதட்டத்துடன் இருந்தேன், அவர் இரண்டு பக்கமும் அதிக வேகத்தில் பந்தை திருப்புகிறார். எனக்கு சிறந்த டெஸ்ட்டாக இருந்தது” எனக் கூறியுள்ளார். இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க, பெடிங்காம் தென்னாப்பிரிக்கா டி20 லீக்கில் பங்கேற்பதை தவிர்த்துள்ளார். அதற்கான பலனை அவர் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட்டில் அடைந்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com