afg vs sa
afg vs sax page

AFG Vs SA | 4 பேர் டக் அவுட்.. 106 ரன்னில் சுருண்ட தென்னாப்பிரிக்கா.. மிரட்டிய ஆப்கன் பவுலர்கள்!

ஆப்கானிஸ்தான் எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 106 ரன்களுக்குச் சுருண்டது.
Published on

தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடர் நடைபெற இருக்கிறது. அந்த வகையில், இவ்விரு அணிகளுக்கான முதல் ஒருநாள் போட்டி, இன்று (செப்.18) ஷார்ஜாவில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.

அதன்படி பேட்டிங்கை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க பேட்டர்களான ஹென்ட்ரிக்ஸ் 9 ரன்னிலும் டோனி டி சோர்சி 11 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து களமிறங்கிய கேப்டன் மார்க்ரம் 2 ரன்களிலும், டிஸ்டான் ஸ்டப்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகி வெளியேறினர்.

இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கைல் வெர்ரைன் 10 ரன்கள் எடுக்க, ஜேசன் ஸ்மித் 0 டக் அவுட் முறையில் வீழ்ந்தார். இப்படி, மற்ற வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆன நிலையில், வியான் முல்டர் மட்டும் நிதானமாக ஆடி அரைசதம் (52 ரன்கள்) கடந்தார்.

இவருக்குப் பின்னால் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்க அணி 33.3 ஓவர்களில் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தப் போட்டியில் 4 வீரர்கள் டக் அவுட் முறையில் வீழ்ந்திருந்தனர். ஆப்கானிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஃபரூக்கி 4 விக்கெட்டுகளையும், காசன்ஃபர் 3 விக்கெட்டுகளையும், ரஷித் கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி, ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

இதையும் படிக்க: குடும்பங்கள் கொண்டாடிய Tupperware-க்கு இப்படியொரு நிலையா? திவால் நிலைக்குச் சென்ற துயரம்!

afg vs sa
தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி இன்னொரு ஷாக் கொடுக்குமா ஆப்கானிஸ்தான்; யார் வென்றாலும் அது புது வரலாறுதான்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com