வியான்  முல்டர்
வியான் முல்டர்cricinfo

தப்பியது லாராவின் 400 ரன்கள் சாதனை.. 367* அடித்திருந்தபோது டிக்ளேர் அறிவிப்பு! இது சரியா?

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 367* அடித்திருந்தபோது டிக்ளேர் அறிவித்த தென்னாப்பிரிக்கா கேப்டன் வியான் முல்டர் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
Published on

ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் தென்னாப்பிரிக்கா அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 328 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்கா 1-0 என முன்னிலை பெற்றது.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 626/5 ரன்கள் குவித்து டிக்ளேர் அறிவித்தது.

தப்பித்த லாராவின் 400 ரன்கள் சாதனை..

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணியில் 3வது வீரராக களமிறங்கிய கேப்டன் வியான் முல்டர், 49 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் விளாசி 367* ரன்கள் குவித்து அசத்தினார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 400* ரன்கள் அடித்த ஒரே வீரரான லாராவின் சாதனையை வியான் முல்டர் முறியடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட போது, இரண்டாம் நாள் ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளையின் போது 626/5 ரன்கள் அடித்திருந்த தென்னாப்பிரிக்கா யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் டிக்ளேர் அறிவித்தது.

வியான் முல்டர்
வியான் முல்டர்

வியான் முல்டர் மற்றும் தென்னாப்பிரிக்கா எடுத்த இந்த முடிவை சில ரசிகர்கள் ஆதரித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பேசியிருக்கும் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெய்ன், “ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டெஸ்டில், ஒரு நாள் ஆட்டத்தை மீதம் வைத்துகூட வெற்றி பெறும் நிலையில்தான் தென்னாப்பிரிக்கா இருந்தது; இன்று மதிய உணவுக்குப் பிறகு டிக்ளர் செய்யாமல், சில ஓவர்கள் பேட்டிங் செய்திருந்தால் கூட அவர்களுக்கான வெற்றியில் எந்த பாதிப்பும் ஏற்பட்டிருக்காது. வியான் முல்டரின் இன்றைய ஆட்டம் 400 ரன்கள் அடிக்க தகுதியானது” என்று தெரிவித்துள்ளார்.

வியான் முல்டர் படைத்த சாதனைகள்!

* கேப்டனாக முதல் டெஸ்ட்டில் விளையாடிய வியான் முல்டர், அறிமுக டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்த முதல் கேப்டன் என்ற வரலாற்று சாதனை படைத்தார்.

* வெளிநாட்டு மண்ணில் (367*) ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த முதல் வீரராக வரலாற்றில் தடம்பதித்தார்.

* தென்னாப்பிரிக்காவுக்காக ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த வீரராகவும் மாறி சாதனை படைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com