ஓய்வை அறிவித்த ஹென்றிச் கிளாசன்
ஓய்வை அறிவித்த ஹென்றிச் கிளாசன்web

33 வயது தான்.. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த ஹென்றிச் கிளாசன்! ரசிகர்கள் அதிர்ச்சி!

தென்னாப்பிரிக்காவின் அதிரடி வீரரான ஹென்றிச் கிளாசன் தன்னுடைய 33 வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை எடுக்கும் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
Published on

2025-ம் ஆண்டானது ஏற்கனவே ‘விராட் கோலியின் டெஸ்ட் ஓய்வு, ரோகித் சர்மாவின் டெஸ்ட் ஓய்வு, ஸ்டீவ் ஸ்மித்தின் ஒருநாள் கிரிக்கெட் ஓய்வு’ என பல இதயம் உடைக்கும் தருணங்களை கொடுத்துள்ளது.

சச்சின், ரிக்கி பாண்டிங் எராவிற்கு பிறகு தங்களை உலக கிரிக்கெட்டின் ஜாம்பவான்களாக உருவாக்கிய விராட், ரோகித், ஸ்மித் போன்ற நட்சத்திர கிரிக்கெட் வீரர்களின் ஓய்வானது ஏற்கனவே ஹார்ட் பிரேக்கிங்கை கொடுத்துள்ள நிலையில், மாடர்ன் டே கிரிக்கெட்டின் சிறந்த ஹிட்டிங் பேட்ஸ்மேன்களான மேக்ஸ்வெல் மற்றும் ஹென்றிச் கிளாசன் இருவரும் அடுத்தடுத்து ஓய்வை அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹென்றிச் கிளாசன்
ஹென்றிச் கிளாசன்

அதிலும் ஹென்றிச் கிளாசன் 33 வயதில் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வை அறிவித்த ஹென்றிச் கிளாசன்..

2018-ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக சர்வதேச அறிமுகத்தை பெற்ற தென்னாப்பிரிக்காவின் விக்கெட் கீப்பர் பேட்டர் ஹென்றிச் கிளாசன், தொடக்கத்தில் பெரிய ஹிட்டர் பேட்ஸ்மேனாக இருக்கவில்லை. ஆனால் சமீபத்தில் தன்னை ஒரு சிறந்த ஹிட்டிங் பேட்ஸ்மேனாக மாற்றிக்கொண்ட ஹென்றிச் கிளாசன், உலகத்தின் தலைசிறந்த பவுலர்களுக்கு எதிராகவும் பெரிய பெரிய சிக்சர்களை அசால்ட்டாக அடிக்கும் திறனை கொண்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு ரெட் பால் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருந்த கிளாசன், தற்போது வெள்ளை பந்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார்.

ஓய்வு குறித்து உருக்கமாக பேசியிருக்கும் அவர், இது என்னுடைய வாழ்வில் ஒரு சோகமான நாள், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் முடிவை குடும்பத்துடன் சேர்ந்து நீண்ட நேரம் ஆலோசித்த பின்னரே எடுக்கிறேன். குடும்பத்துடன் நீண்டநேரம் செலவிடும் நேரத்தை எதிர்ப்பார்க்கிறேன். என் நாட்டிற்காக விளையாடியதை எப்போதும் கௌரவமாக பார்க்கிறேன். என் கிரிக்கெட் வாழ்க்கையில் நிறைய நல்ல மனிதர்களை சம்பாதித்து வைத்துள்ளேன். என்னுடைய வளர்ச்சிக்கு காரணமாகவும், தொடர்ந்து உறுதுணையாகவும் இருந்த அனைவரும் என் மனமார்ந்த நன்றிகள், எப்போதும் தென்னாப்பிரிக்காவிற்கு நன்றி உடையவனாகவே இருப்பேன் என்று பேசியுள்ளார்.

Heinrich Klaasen
Heinrich KlaasenKunal Patil

தென்னாப்பிரிக்கா அணிக்காக 60 ஒருநாள் போட்டிகள், 58 டி20 போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் கிளாசன் மொத்தமாக 3245 ரன்களை அடித்துள்ளார். அதிகபட்சமாக 2023-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 174 ரன்கள் அடித்துள்ளார். கிளாசன் போன்ற ஒரு பெரிய ஹிட்டிங் பேட்ஸ்மேனை தென்னாப்பிரிக்கா அணி மட்டுமல்லாமல் கிரிக்கெட் ரசிகர்களும் தவறவிடுவார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com