\
sooryavanshi - tilak varma
sooryavanshi - tilak varmabcci / JioStar

‘என்னை சீண்டுனா இதான் நடக்கும்..’ திலக் வர்மாவை Sledge செய்த சூர்யவன்ஷி.. 99 ரன்னில் அவுட்டான சோகம்!

துலீப் டிராபியின் இறுதிப்போட்டியில் 99 ரன்னில் அவுட்டானார் தெற்கு மண்டல அணி கேப்டன் திலக் வர்மா..
Published on
Summary

2026 துலீப் டிராபி இறுதியில் கிழக்கு மண்டல கேப்டன் சூர்யவன்ஷி, தெற்கு மண்டல கேப்டன் திலக் வர்மாவை ஸ்லெட்ஜிங் மூலம் சீண்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இஷான் கிஷன் 270 ரன்கள் அடித்து கிழக்கு அணி 708 ரன்கள் குவித்த நிலையில், திலக் வர்மா 99 ரன்களில் அவுட்டாகி சதம் தவற, அவரது அணி 336 ரன்களில் ஆல்அவுட் ஆனது.

2026 துலீப் டிராபி தொடர் மண்டல அணிகளுக்கு இடையே பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. சிறப்பாக செயல்பட்ட சூர்யவன்ஷியின் கிழக்கு மண்டல மற்றும் திலக் வர்மாவின் தெற்கு மண்டல அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடிவருகின்றன.

கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி சென்னை சிதம்பரம் மைதானத்தில் தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சூர்யவன்ஷியின் கிழக்கு மண்டல அணி, கேப்டன் இஷான் கிஷானின் 270 ரன்கள் என்ற மிரட்டலான ஆட்டத்தால் 708 ரன்களை மலைபோல் குவித்தது.

பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம் என்பதால் தொடர்ந்து விளையாடிய தெற்கு மண்டல அணியும் பெரிய அளவில் ரன்களை குவிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி மற்றும் முகேஷ் குமார் இருவரும் தெற்கு மண்டல பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து வெளியேற்றி ஷாக் கொடுத்தனர். ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் திலக் வர்மா அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

99 ரன்கள் அடித்திருந்தபோது திலக் வர்மா துரதிருஷ்டவசமாக அவுட்டாக அவரின் அணி 336 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆல்அவுட்டானது. தொடர்ந்து விளையாடிவரும் கிழக்கு மண்டல அணி 4ஆம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் சேர்த்து 584 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. எப்படியும் இறுதிப்போட்டியை வென்று கோப்பை வெல்லும் முன்னிலையை சூர்யவன்ஷியின் கிழக்கு மண்டல அணி பெற்றுள்ளது.

திலக் வர்மாவிற்கு பதிலடி கொடுத்த சூர்யவன்ஷி!

இறுதிப்போட்டி தொடங்கிய முதல் நாள் ஆட்டத்தின் போது தொடக்க வீரர்களாக களமிறங்கிய சூர்யவன்ஷி மற்றும் திலக் வர்மா இருவரும் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தினர். அப்போது விக்கெட் வீழ்த்த முடியாத விரக்தியில் இருந்த எதிரணி கேப்டன் திலக் வர்மா, சூர்யவன்ஷியிடம் வந்து சில வார்த்தைகளை பகிர்ந்துகொண்டார். அப்போது நீங்கள் எந்த பவுலர் அனுப்பினாலும் அடிப்பேன் என சூர்யவன்ஷி பதிலளித்தார். உடனே அணியின் சிறந்த பவுலரான சிராஜை திலக் வர்மா களமிறக்க, அவருடைய ஓவரில் சிக்சர் பவுண்டரிகள் என விரட்டிய சூர்யவன்ஷி திலக்கை பார்த்து சிரித்தார். இருந்தாலும் அரைசதமடிக்காமல் 44 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.

இந்தசூழலில் தான் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டத்தில் 8 விக்கெட்டுகளை இழந்து தெற்கு மண்டல அணி தடுமாறி கொண்டிருந்தபோது, களத்தில் போராடிக்கொண்டிருந்த திலக்வரமாவை சீண்டினார் சூர்யவன்ஷி. வேறு வழியில்லாமல் திலக் வர்மா சூர்யவன்ஷியின் ஸ்லெட்ஜிங்கை பொறுத்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. இருப்பினும் சிறப்பாக விளையாடிய திலக் வர்மா சதமடிக்கும் வாய்ப்பை இழந்து 99 ரன்னில் அவுட்டான போது, இஷான் கிஷனுடன் சேர்ந்து சூர்யவன்ஷியும் திலக் வர்மாவின் ஆட்டத்தை பாராட்டினார். பேட்டிங்கில் மட்டுமில்லாமல் களத்திலும் சூர்யவன்ஷி தலைப்புச்செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com