\
வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷிcricinfo

இலங்கை மண்ணில் வரலாறு படைத்த சூர்யவன்ஷி.. 29 பந்தில் 94 ரன்கள் அடித்து மிரட்டல்!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணி பவுலர்களை பந்தாடிய சூர்யவன்ஷி புதிய வரலாற்று சாதனை படைத்தார்.
Published on
Summary

இலங்கை ஏ அணிக்கு எதிரான முத்தரப்பு தொடரின் இறுதியில் இந்தியா ஏ அணி 377 ரன்கள் குவிக்க சூர்யவன்ஷியின் புயல் பேட்டிங் காரணமாக சாதனைப் பதிவு செய்யப்பட்டது. 11 பந்தில் 5 பவுண்டரி, 5 சிக்சர் அடித்து, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் உலகின் அதிவேக அரைசத வீரராக வரலாறு படைத்தார்.

இந்தியா ஏ, இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்றது. இத்தொடரில் சிறப்பாக விளையாடிய இலங்கை மற்றும் இந்திய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.

இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சூர்யவன்ஷியின் சூறாவளி ஆட்டத்தால் 50 ஓவரில் 377 ரன்கள் சேர்த்தது. முதல் 11 பந்தில் 5 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என துவம்சம் செய்த சூர்யவன்ஷி, குறைவான பந்தில் அரைசதமடித்து வரலாறு படைத்தார். சர்வதேச போட்டி இல்லையென்றாலும் யுவராஜ் சிங்கின் 12 பந்தில் அரைசதம் என்ற சாதனையை நொறுக்கிய அவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதமடித்த முதல் உலக வீரராக வரலாறு படைத்தார்.

தொடர்ந்து அதிரடியை நிறுத்தாத சூர்யவன்ஷி 300 ஸ்ட்ரைக்ரேட்டுக்கு மேல் 10 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 29 பந்தில் 94 ரன்கள் அடித்து வெளியேறினார்.

378 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 47.1 ஓவரில் 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இறுதிப்போட்டியில் 94 ரன்கள் குவித்த சூர்யவன்ஷி ஆட்டநாயகன் விருதை வென்றதோடு, இலங்கை போன்ற பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் சோபிக்க மாட்டார் என்ற விமர்சனத்தையும் தவிடுபொடியாக்கினார்.

வைபவ் சூர்யவன்ஷி
T20 WC| அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்குமா இந்தியா..? தென்னாப்பிரிக்காவிற்கு 159 ரன்கள் இலக்கு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com