\
ind vs nz
ind vs nzbcci / ani

2வது டி20: அதே மைதானத்தில் போட்டி! சூர்யவன்ஷி களமிறங்க வாய்ப்பு! மீண்டும் 445 ரன்கள் வருமா?

இரண்டாவது டி20 போட்டியில் இன்று இந்தியா-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Published on: 
Summary

இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் இடையிலான 2வது டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. முதல் போட்டியில் 445 ரன்கள் அடிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியிலும் அதிக ரன்கள் வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இஷான் கிஷன் விலகியதால், சூர்யவன்ஷி களமிறங்க வாய்ப்பு அதிகம்.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி 5 டி20 போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியில் மொத்தமாக 445 ரன்கள் அடிக்கப்பட்ட நிலையில், இந்திய அணி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர்களுடைய சிறந்த சேஸிங்கை பதிவுசெய்தது.

IND vs NZ t20 series
IND vs NZ t20 series

இந்தசூழலில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்றும், அதே கிறிஸ்ட்சர்ச் மைதானத்திலேயே நடக்கவிருக்கிறது. இதனால் இன்றும் 445 ரன்கள் ஸ்கோர்போர்டு வருமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

அதிக ஸ்கோர் வருமா?

சிறிய மைதானம் என்பதால், முதல் போட்டியை போல 455 ரன்கள் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இரண்டாவது போட்டியும் நியூசிலாந்து நேரப்படி இரவு 8 மணிக்கு, குளிரான வானிலையில் தொடங்குவதால், பனியும் விரைவாகவே வருகிறது. இதனால் ஆடுகளம் தொடக்கத்தில் சற்று மெதுவாக இருந்ததாகவும், பின்னர் தட்டையாக மாறியதாகவும் ஸ்ரேயாஸ் ஐயர் குறிப்பிட்டார். தொடக்கத்தில் பந்து நன்றாக ஸ்விங் ஆனதாகவும், ஆனால் பந்து ஆடுகளத்தில் இருந்து அழகாக வந்ததாகவும் சஞ்சு சாம்சனும் சுட்டிக்காட்டினார். இதனால் இரண்டாவது டி20 போட்டியிலும் அதிக ரன்கள் வர வாய்ப்பு இருக்கிறது. இந்தசூழலில் இரு தரப்பு வேகப்பந்து வீச்சாளர்களும் பந்தின் ஆரம்ப அசைவை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்புவார்கள்.

சூர்யவன்ஷி களமிறக்கப்படுவாரா?

தசைபிடிப்பு காரணமாக இஷான் கிஷன் இரண்டாவது போட்டியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார், இது இந்திய பேட்டிங் வரிசையில் மாற்றங்களுக்கு வழிவகுக்கக்கூடும். இதனால்தான் முதல் ஆட்டத்திலேயே திலக் வர்மா மூன்றாவது இடத்திற்குப் பதவி உயர்வு பெற்றார். இஷான் கிஷனுக்கு பதிலாக குமார் குஷாக்ரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

kamran akmal slams saim ayub for mocking vaibhav sooryavanshi issue
vaibhav sooryavanshiANI

இந்தசூழலில் இந்தியா டாப் 3 வீரர்களை மாற்றாமல், மிடில் ஆர்டரை வலுப்படுத்த சிவம் துபே அணியில் வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் வைபவ் சூர்யவன்ஷியை களமிறக்குவதற்கான அதிக வாய்ப்புள்ளது போல பேட்டிங் பயிற்சியாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த 15 வயது இளம் மேதை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெற்றார், ஆனால் இதுவரை அணியின் முதல் தேர்வுத் திட்டங்களில் அவர் இடம்பெறவில்லை. ஒருவேளை அவரை விளையாட வைத்தால், சாம்சன் மூன்றாவது இடத்திற்கு இறங்க வேண்டியிருக்கும். சாம்சன் சிறந்த ஃபார்மில் இருப்பதால் அதை முயற்சிப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com