விரைவில் இந்தூரின் மருமகளாக மாறும் ஸ்மிருதி மந்தனா.. உறுதிப்படுத்திய காதலர்!
ஸ்மிருதி மந்தனா விரைவில் இந்தூரின் மருமகளாக மாறுவார் என திரைப்படத் தயாரிப்பாளரும் இசைக்கலைஞருமான பலாஷ் முச்சல் உறுதியளித்துள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும் தொடக்க வீராங்கனையுமான ஸ்மிருதி மந்தனா, தற்போது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். இதில் 8 நாடுகள் பங்கேற்றுள்ளன. இத்தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஸ்மிருதி மந்தனா விரைவில் இந்தூரின் மருமகளாக மாறுவார் என திரைப்படத் தயாரிப்பாளரும் இசைக்கலைஞருமான பலாஷ் முச்சல் உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அவர் (மந்தனா) விரைவில் இந்தூரின் மருமகளாக மாறுவார். நான் சொல்ல விரும்புவது அவ்வளவுதான்” என்று கூறி, புன்னகையுடன் செய்தியை உறுதிப்படுத்தினார். முன்னதாக, மந்தனாவும் முச்சலும் அடிக்கடி சமூக ஊடகங்களில் ஒன்றாக புகைப்படங்களில் தோன்றினர். ஆனால் அவர்கள் தங்கள் காதலைப் பகிரங்கமாக உறுதிப்படுத்தவில்லை. இந்த நிலையில்தான், முச்சல் அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தவிர, மகளிர் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் கேப்டன் ஹவுர் மற்றும் மந்தனா உள்ளிட்ட இந்திய அணிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் ஏற்கெனவே தங்கள் இடங்களை உறுதி செய்துள்ள நிலையில், அரையிறுதிக்கான போட்டியில் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற வேண்டியிருப்பதால் இந்தப் போட்டி முக்கியமானது.
மேலும், இந்த அறிவிப்புடன், பலாஷ் முச்சால் தனது இயக்குநரான 'ராஜு பஜேவாலா' படத்தில் அவிகா கோர் மற்றும் சந்தன் ராய் நடிக்கிறார். முச்சால் தனது சகோதரி பலக் முச்சலுடன் பல பாலிவுட் படங்களுக்கு இசையமைத்ததற்காக அறியப்படுகிறார். மறுபக்கம், முச்சல் - மந்தனா ஆகியோரின் திருமணம் குறித்த செய்தி இந்தூர் மக்களிடையா மிகுந்த ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.