\
shubman gill left out ground after scoring 80 runs
shubman gill left out ground after scoring 80 runsweb

80 ரன்கள் அடித்தபோதும் பாதியிலேயே கிரவுண்டை விட்டு வெளியேறிய கேப்டன் கில்.. என்ன நடந்தது?

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 80 ரன்கள் அடித்தபோதும் கேப்டன் சுப்மன் கில் பாதியிலேயே கிரவுண்டை விட்டு வெளியேறினார்.
Published on
Summary

பர்மிங்காம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டியில், 259 ரன்கள் இலக்காக இந்தியா பின்தொடர்கிறது. ரோகித், கோலி விரைவில் அவுட்டான நிலையில், கேப்டன் சுப்மன் கில் 75 பந்தில் 11 பவுண்டரி, 1 சிக்சர் சேர்த்து 80 ரன்கள் குவித்து அணியை தாங்கினார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 47.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 258 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 76* ரன்களும், ஆல்ரவுண்டர் லியம் டாசன் 68 ரன்களும் அடித்து அசத்தினர்.

259 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இந்திய அணியில் மூத்தவீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் 11 மற்றும் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் கொடுத்தனர். ஆனால் மறுமுனையில் ஸ்ரேயாஸ் ஐயருடன் கைக்கோர்த்த இந்திய கேப்டன் சுப்மன் கில் தன்னுடைய ஃபார்மை மீண்டும் நிரூபித்தார்.

கில்
கில்

75 பந்தில் 11 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசி 80 ரன்கள் அடித்திருந்த சுப்மன் கில், தசைப் பிடிப்பால் அவதிப்பட்டார். தொடர்ந்து பிசியோ களத்திற்கு வந்து சிகிச்சை கொடுத்தபோதிலும் அவரால் விளையாட முடியவில்லை. சதமடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ரிட்டயடு ஹர்ட் மூலம் பாதியிலேயே வெளியேறினார்.

அவர் வெளியேறிய பிறகு ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் என அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறிய நிலையில், இந்திய அணி இக்கட்டான நிலையில் 160/4 என விளையாடிவருகிறது. களத்தில் வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல் பேட்டிங் செய்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com