gill
Gillweb

எந்த இந்திய வீரரும் படைக்காத சாதனை.. ஒரே போட்டியில் 4 வரலாற்று சம்பங்களை நிகழ்த்திய கில்!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதமடித்த சுப்மன் கில் 4 அற்புதமான சாதனைகளை படைத்துள்ளார்.

1. முதல் சர்வதேச வீரர்..

இங்கிலாந்துக்கு எதிராக தன்னுடைய 50வது ஒருநாள் போட்டியில் களம்கண்ட சுப்மன் கில், 102 பந்துகளில் 14 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என விளாசி 112 ரன்கள் குவித்தார்.

இதன்மூலம் 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அதிக ரன்கள் (2587 ரன்கள்) அடித்த சர்வதேச வீரராக சுப்மன் கில் வரலாற்று சாதனை படைத்தார்.

முதலிடத்திலிருந்த தென்னாப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லா (2486 ரன்கள்) சாதனை முறியடித்து இந்த சாதனை சாதனையை படைத்தார் கில்.

அதுமட்டுமில்லாமல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 2500 ரன்களை அதிவேகமாக கடந்த முதல் வீரராகவும் மாறினார்.

2. முதல் இந்திய வீரர்..

shubman gill
shubman gillcricinfo

இங்கிலாந்துக்கு எதிராக தன்னுடைய 50வது ODI போட்டியில் விளையாடி சதமடித்த சுப்மன் கில், 50வது சர்வதேச ஒருநாள் போட்டியில் சதமடித்த முதல் இந்திய வீரராக சாதனை படைத்தார்.

3. ஒரே இந்திய வீரர்..

அகமதாபாத் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 7வது ஒருநாள் சதமடித்த சுப்மன் கில், முதல் இந்திய வீரராக மற்றொரு பிரத்யேக சாதனையையும் படைத்தார்.

அதாவது ஒரே ஸ்டேடியத்தில் டெஸ்ட், ODI, டி20 என மூன்று வடிவத்திலும் சதமடித்த முதல் இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார்.

gill
gill

இதற்கு முன்பு தென்னாப்பிரிக்காவின் டூபிளெசிஸ் மற்றும் டிகாக், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், பாகிஸ்தானின் பாபர் அசாம் மட்டுமே இந்த சாதனையை படைத்திருந்த நிலையில், முதல் இந்திய வீரராக சுப்மன் கில் இப்பட்டியலில் இணைந்துள்ளார்.

4. கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், தோனி வரிசையில் கில்..

இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் தொடரில் விளையாடிய சுப்மன் கில், 3 போட்டிகளிலும் அரைசதமடித்து அசத்தினார். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட இருதரப்பு இந்திய அணிக்காக அனைத்து போட்டிகளிலும் அரைசதமடித்த வீரர்கள் பட்டியலில் முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மற்றும் தோனியுடன் இணைந்துள்ளார்.

gill
gillcricinfo

இருதரப்பு தொடரில் 3 போட்டிகளிலும் அரைசதமடித்த இந்தியர்கள்:

1. கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் vs இலங்கை (1982)

2. திலிப் வெங்க்சர்க்கர் vs இலங்கை (1985)

3. அசாருதீன் vs இலங்கை (1993)

4. மகேந்திர சிங் தோனி vs ஆஸ்திரேலியா (2019)

5. ஸ்ரேயாஸ் ஐயர் vs நியூசிலாந்து (2020)

6. இஷான் கிஷன் vs வெஸ்ட் இண்டீஸ் (2023)

7. சுப்மன் கில் vs இங்கிலாந்து (2025)

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com