’என் மகிழ்ச்சிக்குக் காரணம்’ - புது திருமணம் செய்துகொண்ட சோயிப் மாலிக்கின் பழைய வீடியோ வைரல்!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக், தற்போது நடிகை சனா ஜாவேத்தைத் திருமணம் செய்திருக்கும் நிலையில், அவருடைய பழைய வீடியோ பதிவுகள் வைரலாகி வருகின்றன.
சோயிப் மாலிக்
சோயிப் மாலிக்ட்விட்டர்

இந்தியாவின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, கடந்த 2010-ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், சானியா மற்றும் சோயிப் மாலிக் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்பட்டு வந்தது. இது தொடர்பாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, சோயிப் மாலிக், அந்நாட்டு நடிகை சனா ஜாவேத்தைத் திருமணம் செய்துகொண்டதாகப் புகைப்படத்துடன் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

சோயிப் மாலிக்
சோயிப் மாலிக்

இதையடுத்து, சானியா மிர்சாவை விவாகரத்து செய்யாமல் எப்படி, அவர் இன்னொரு திருமணம் செய்யலாம் என இணையத்தில் விவாதங்கள் நடைபெற்றன. இதற்கு, சானியா மற்றும் சோயிப் ஆகிய இருவரும் முன்னரே விவாகரத்து செய்துகொண்டதாக, சானியாவின் குடும்பத்தினர் தெளிவுபடுத்தினர். அத்துடன், சோயிப்பின் மறுமணத்திற்கு சானியா வாழ்த்து சொன்னதாகவும் செய்திகள் வெளியாகின.

இதையும் படிக்க: ராமர் பிரதிஷ்டை நாளில் பேரணி: அல்லா மீது சத்தியம் செய்து ஆவேசமாக பேசிய மம்தா பானர்ஜி - நடந்தது என்ன?

இந்த நிலையில், சோயிப், தன் குடும்பப் பிரச்னைகள் குறித்து பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்கும் கேள்விக்கு சோயிப் பதில் அளிக்கிறார். நிகழ்ச்சித் தொகுப்பாளர், “சோயிப், ஏன் செட்டில் இவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளார்” எனக் கேள்வி எழுப்புகிறார். அதற்கு சோயிப் மாலிக், ’தனது குடும்பத்தைவிட்டு விலகி இருப்பதால் இந்த மகிழ்ச்சி’ என்று கூறுகிறார். அதற்கு நிகழ்ச்சித் தொகுப்பாளர், அனைவருக்கும் தங்கள் வாழ்க்கையில் ஒரே மாதிரியான பிரச்னைகள் இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள்” எனச் சொல்கிறார். இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்று, இந்த வீடியோ வைரலாகும் நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இவர் பதிலளித்த இன்னொரு பழைய வீடியோவும் குறிப்பிடத்தக்கது. அதில், ’உங்களுக்குப் பிடித்த ஐந்து பெண்களின் பெயர்களைக் கூறுங்கள்’ எனக் கேள்வி கேட்கப்படுகிறது.

அதற்கு சோயிப் மாலிக், "எல்லாப் பெண்களும் அழகாக இருக்கிறார்கள். எனக்கு ஐந்து பெண்கள் அல்ல, 500 பெண்களைப் பிடிக்கும்’ எனக் கூறும் அந்த வீடியோ கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுடன் சுற்றிய அசைவ உணவு சர்ச்சை... இணையத்தில் வைரலாகும் பதிவுகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com