37 போட்டிக்கு பிறகு முடிவுக்கு வந்த ஷிவம் துபேவின் வெற்றி ஓட்டம்
37 போட்டிக்கு பிறகு முடிவுக்கு வந்த ஷிவம் துபேவின் வெற்றி ஓட்டம்web

37 வெற்றிகளுக்கு பின் முதல் தோல்வி.. முடிவுக்கு வந்த ’ஷிவம் துபே’-ன் அதிர்ஷ்ட ஓட்டம்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் படுதோல்வியை சந்தித்துள்ளது சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி..
Published on
Summary

மெல்போர்னில் நடந்த டி20 போட்டியில், இந்திய அணி 125 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலியா 126 ரன்களை எளிதில் அடித்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 37 போட்டிகள் மற்றும் 24 போட்டிகளுக்கு பிறகு ஷிவம் துபே மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரின் அதிர்ஷ்ட ஓட்டம் முடிவுக்கு வந்தது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 என இழந்தபிறகு, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெல்லும் எண்ணத்தில் களம்கண்டுள்ளது இந்திய அணி..

இந்தியா - ஆஸ்திரேலியா டி20
இந்தியா - ஆஸ்திரேலியா டி20

கான்பெராவில் தொடங்கப்பட்ட முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது டி20 போட்டி மெல்போர்னில் நடைபெற்றது..

17 ஆண்டுக்கு பிறகு தோல்வி..

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஹசல்வுட்டின் அபாரமான பந்துவீச்சில் 125 ரன்களுக்கு சுருண்டது. ஹசல்வுட் 4 ஓவரில் 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிறப்பாக பேட்டிங் செய்த அபிஷேக் சர்மா 68 ரன்கள் அடித்தார்..

ஹசல்வுட்
ஹசல்வுட்

126 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய ஆஸ்திரேலியா அணி 13.2 ஓவரில் 126/6 ரன்கள் அடித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.. இந்த வெற்றியின் மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு மெல்போர்ன் மைதானத்தில் நடந்த டி20 போட்டியில் இந்தியாவை தோற்கடித்தது ஆஸ்திரேலியா..

37 வெற்றிக்கு பிறகு முதல்தோல்வி..

இந்திய டி20 அணியை பொறுத்தவரையில் 2019-ல் இருந்து அதிர்ஷ்ட வீரராக இருந்துவருகிறார் ஷிவம் துபே.. 2019-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தோற்றதற்குபிறகு, இந்திய டி20 அணியில் ஷிவம் துபே இடம்பெற்றால் ஒருமுறைகூட இந்திய அணி தோல்வியை தழுவியதில்லை.. இந்த தொடர் வெற்றி 37 போட்டிகளுக்கு பிறகு இன்று முடிவுக்கு வந்தது..

அதேபோல டி20 அணியில் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெற்று 24 போட்டிகளாக வென்ற இந்திய அணி இன்று முதல் தோல்வியை சந்தித்துள்ளது..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com