இலங்கை மண்ணில் ரன்வேட்டை நடத்திய வங்கதேசம்.. 2 வீரர்கள் சதம்.. 484/9 ரன்கள் குவித்து அசத்தல்!
இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.
2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முதலில் தொடங்கப்பட்ட நிலையில், இலங்கை-வங்கதேசம் 2 அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று இலங்கையில் உள்ள கலி சர்வதேச மைதானத்தில் தொடங்கியது.
முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் விளையாடிவரும் வங்கதேச அணி 452/4 ரன்கள் குவித்து விளையாடிவருகிறது.
போட்டியின் தொடக்கத்தில் தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடவிருக்கும் இலங்கை வீரர் ஆஞ்சிலோ மேத்யூஸ்க்கு அணி வீரர்கள் மரியாதை செலுத்தினர்.
2 வீரர்கள் சதம்.. 450 ரன்களை கடந்த வங்கதேசம்!
விறுவிறுப்பாக தொடங்கப்பட்ட முதல் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி இலங்கை அணியை பந்துவீசுமாறு அழைத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 45 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் மற்றும் முஸ்ஃபிகுர் ரஹீம் இருவரும் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி அடுத்தடுத்து சதமடித்து அசத்தினர்.
இரண்டு வீரர்களும் சேர்ந்து 264 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட, வங்கதேச அணிக்காக 4வது விக்கெட்டீல் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட ஜோடியாக வரலாறு படைத்தனர். ஷாண்டோ 148 ரன்கள் அடித்து அவுட்டாக, 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரஹீம் மற்றும் லிட்டன் தாஸ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இந்த ஜோடி 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட 163 ரன்கள் அடித்திருந்தபோது LBW விக்கெட் மூலம் முஸ்ஃபிகுர் ரஹீம் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிட்டன் தாஸ் 90 ரன்கள் அடித்திருந்த போது சதமடிக்கும் வாய்ப்பை இழந்து அவுட்டாகினார். இரண்டாம் நாள் முடிவில் 484/9 என்ற வலுவான நிலையில் பேட்டிங் செய்துவருகிறது வங்கதேச அணி.