எல்லோரும் ஷமி ‘wrist position’-ஐ பாராட்டுறாங்க! அதற்கு என்ன செய்தார் தெரியுமா? ரகசியம் பகிரும் கோச்!

ஒவ்வொரு நாளும் அவர் ஒரு பழைய பந்தை வீட்டுக்கு எடுத்துச் செல்வார், அதற்கு பிறகு என்ன செய்வார் என்பது அவரது தந்தை சொல்லித்தான் எனக்கு தெரிந்தது - ஷமியின் சிறுவயது பயிற்சியாளர்
Mohammed Shami
Mohammed ShamiTwitter

உலகில் அதிகமாக புகழப்படும் வேகப்பந்துவீச்சாளர்கள் எல்லோரும் பந்தை அற்புதமாக ஸ்விங் செய்யக்கூடிய பவுலர்களாகவே இருப்பார்கள். அவர்களால் மட்டும்தான் அதிக விக்கெட்டுகள் வீழ்த்த முடியும் என்றும், பேட்ஸ்மேன்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்ற எண்ணங்கள் அதிகமாகவே இருந்துவருகிறது. இந்த எழுதப்படாத விதிமுறையை தனது ரிஸ்ட் நிலை பவுலிங்கால் தற்போது தலைகீழாக மாற்றியுள்ளார் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி.

ஷமி
ஷமி

ஸ்விங் இல்லாமல் ரிஸ்ட் மூலம் சிறப்பாக செயல்படும் பவுலர்கள் எல்லாம் சிறிது காலத்தில் காணாமல் போய்விடுவார்கள், அதிக காலம் தாக்குப்பிடிக்க மாட்டார்கள் என்ற அனைத்து விமர்சனங்களையும் உடைத்திருக்கும் முகமது ஷமி, இந்திய அணியின் லீடிங் பவுலராக வெற்றிநடைபோட்டு வருகிறார். அணியில் இருந்து ஓய்வளிக்கப்பட்டாலும் தொடர்ந்து தனது ரிஸ்ட் பொசிசனில் வீட்டிலிருந்தே வேலை செய்துவரும் ஷமி, மீண்டும் கம்பேக் கொடுக்கும் போதெல்லாம் பேட்ஸ்மேன்களுக்கு புதிது புதிதாக தொல்லை தருகிறார்.

ஷமி
ஷமி

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் ஷமி, ஏன் அவர் இந்திய அணியின் லீடிங் பவுலர் என்பதை இன்னொருமுறை நிரூபித்து காட்டியுள்ளார். 19 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 விக்கெட்டுகள் வீழ்த்திய 3வது இந்திய வேகப்பந்துவீச்சாளராக மாறியுள்ள ஷமி, 16 வருடங்களுக்கு பிறகு இந்திய மண்ணில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளராகவும் மாறியுள்ளார். ஷமியின் அற்புதமான பவுலிங் அட்டாக்கை பாராட்டி வரும் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் அனைவரும் அவரின் ரிஸ்ட் பொசிசனை அதிகமாக புகழ்ந்து வருகின்றனர்.

வீட்டுக்கு போகும் போதெல்லாம் ஒரு பழைய பந்தை எடுத்து செல்வார்!

ஷமியின் தலைசிறந்த சீம் பவுலிங்கிற்கு அவருடைய ரிஸ்ட் பொசிசனை பாராட்டிய சிறுவயது பயிற்சியாளர் முகமது பதுருதீன், எப்படி ஷமி அதை சிறந்ததாக மாற்றினார் என்ற ரகசியம் குறித்து பேசியுள்ளார்.

ஷமி
ஷமி

இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருக்கும் செய்தியில் பேசியிருக்கும் பதுருதீன், “பயிற்சிக்கு பிறகு அல்லது விளையாடி முடித்த பிறகு தினமும் ஒரு பழைய பந்தை ஷமி வீட்டுக்கு எடுத்துச் செல்வார். எதற்காக இந்த பையன் பழைய பந்தை எடுத்துச்செல்கிறான் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் எழும். அவரது தந்தை ஒருமுறை ஷமியின் படுக்கைக்கு முன்னால் இருக்கும் சுவர் முழுவதும் சிவப்பு பந்துகளின் கறையைக் காட்டினார். அப்போதுதான் ஷமி தினமும் வீட்டில் என்ன செய்கிறார் என்றே எனக்கு தெரிந்தது. அவர் பந்தை சுவற்றில் வீசுவார், பின்னர் தனது மணிக்கட்டு நிலையை சரியாக நிறுத்தி பந்தைப் பிடிப்பார். இப்படி தான் தன்னுடைய ரிஸ்ட் பொசிசனை அவர் சிறுவயதில் இருந்தே தயார்படுத்தினார்” என்று கூறியுள்ளார்.

Shami
Shami

மேலும், “எத்தனை பந்துகள் ஷமியிடம் அதன் வடிவத்தை இழந்துவிட்டன எனக்கு தெரியாது. எல்லோரும் அவருடைய மணிக்கட்டு நிலையைப் பற்றி பாராட்டி பேசுகிறார்கள், ஆனால் அதைக் கச்சிதமாக்க அவர் செய்த வேலையைப் பற்றி மிகச் சிலரே அறிந்திருக்கிறார்கள். நல்ல ரிஸ்ட் பொசிசனுடன் பல பந்துவீச்சாளர்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்கள் எல்லோரும் சிறிது காலத்திற்குப் பிறகு அதில் சிறந்ததாக இருக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் ஷமியை போல் அதை முழுமையாக்க கடினமாக உழைக்கவில்லை ” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com