ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை கேப்டனாக ஷாகிப் நியமனம்! 17 வீரர்கள் கொண்ட வங்கதேச அணி அறிவிப்பு!

ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர்களில் வங்கதேச அணியை வழிநடத்த மூத்தவீரர் ஷாகிப் அல் ஹசனை கேப்டனாக நியமனம் செய்து அறிவித்துள்ளது வங்கதேச கிரிக்கெட் வாரியம்.
Shakib Al Hasan
Shakib Al HasanICC

2023ஆம் ஆண்டு ஒருநாள் ஆடவர் உலகக்கோப்பை தொடர், வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. உலகக்கோப்பை என்ற பெரிய பட்டத்தை கைப்பற்றுவதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. இதில் வங்கதேச அணி, ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர்கள் இரண்டிற்கும் வங்கதேச கேப்டனாக மூத்த ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் செயல்படுவார் என அறிவித்துள்ளது.

ஷாகிப் அல் ஹசன் கேப்டனாக இருப்பார்!

ஷாகிப் அல் ஹசன் நியமனம் குறித்து நேற்று பேசியிருந்த வங்கதேச கிரிக்கெட் வாரிய (பிசிபி) தலைவர் நஸ்முல் ஹாசன், “ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பைக்கு ஷகிப்-ஐ கேப்டனாக நியமித்துள்ளோம். இரண்டு பெரிய கோப்பைகளுக்கான அணிகள் நாளை அறிவிக்கப்படும். 17 பேர் கொண்ட அணியை தேர்வாளர்கள் தேர்வு செய்வார்கள்” என்று கூறியுள்ளார்

Shakib Al Hasan
Shakib Al Hasan

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசியக் கோப்பையில் இருந்து ஒருநாள் வங்கதேச அணி கேப்டன் தமிம் இக்பால் விலகியநிலையில், அவருக்கு பதிலாக ஷாகிப் பொறுப்பேற்றுள்ளார். கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து டெஸ்ட் மற்றும் டி20 அணியின் கேப்டனாக இருந்து வந்த ஷாகிப், தற்போது ஒருநாள் அணிக்கும் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். மொத்தமாக 52 ODIகள், 19 டெஸ்ட் மற்றும் 39 டி20-களில் வங்கதேசத்தை வழிநடத்தியிருக்கிறார்.

ஆசியக்கோப்பைக்கான வங்கதேச அணி!

இன்று ஆசியக்கோப்பை மற்றும் உலகக்கோப்பைக்கான வங்கதேச அணிகள் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில், அதன்படி தற்போது ஆகஸ்ட் 30ம் தேதி தொடங்கவிருக்கும் ஆசியக்கோப்பைக்கான 17 வீரர்கள் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய வீரராக விளையாடி வந்த மூத்தவீரர் முகமதுல்லா அணியில் இடம்பெறவில்லை. 22 வயது இளம் வீரரான தன்ஷித் ஹாசனுக்கு அறிமுகமாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக தமிம் இக்பால் இடம்பெறவில்லை.

Shakib Al Hasan
Shakib Al Hasan

வங்கதேச ஆசிய கோப்பை அணி : ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), லிட்டன் தாஸ், தன்ஜித் ஹசன் தமீம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தவ்ஹித் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஹசன் மம்ஹுத், மஹேதி ஹசன், நசும் அஹோஸ்ஃபுல், நஸூம் அஹ்மத் இஸ்லாம், எபடோட் ஹொசைன், முகமது நைம்

IN: தன்சித் ஹசன், ஷமிம் ஹொசைன், மஹேதி ஹசன், நசும் அகமது

OUT: தமீம் இக்பால், தைஜுல் இஸ்லாம், ரோனி தாலுக்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com