ஷாகிப் அல் ஹசன்
ஷாகிப் அல் ஹசன்X

MP தேர்தலில் வெற்றி! வாழ்த்த வந்த ரசிகரை கன்னத்தில் அறைந்த ஷாகிப் அல் ஹசன்! #viralvideo

வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றுள்ளார்.

ஷாகிப் அல் ஹசனும் சர்ச்சையும் என கிரிக்கெட் வரலாற்றில் நிறைய சம்பவங்கள் நடந்துள்ளன. தன்னுடைய மூர்க்கத்தனமான கோவத்தினால் ஸ்டம்புகளை எட்டி உதைத்தது, அம்பயர்களிடம் தகாத முறையில் திட்டி நடந்துகொண்டது என தொடர்ந்து சில போட்டிகளில் விளையாடுவதற்கு தடையையும் கூட ஷாகிப் பெற்றுள்ளார்.

ஆனால் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற போதும் கூட, தன்னை காண வந்த ரசிகரை கன்னத்தில் அறைந்திருக்கும் ஷாகிப் அல் ஹசனின் செயலானது பல்வேறு தரப்பினரின் விமர்சனத்தை பெற்றுவருகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற ஷாகிப்!

சமீபத்தில் நடந்துமுடிந்த வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி சார்பில், வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் போட்டியிட்டார். தன்னுடைய சொந்த தொகுதியான மகுராவில் போட் சின்னத்தில் நின்ற அவர், எதிர்த்து நின்றவரை சுமார் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரமான வெற்றியை பதிவுசெய்துள்ளார். இதன்மூலம் விரைவில் எம்பியாக பொறுப்பேற்பார் என்று தெரிகிறது.

ஏற்கனவே முன்னாள் வீரர் மொர்டஷா எம்பியாக பதவி வகித்த நிலையில், வங்கதேசத்தின் கிரிக்கெட் வீரர்களில் எம்பியான இரண்டாவது வீரராக ஷாகிப் அல் ஹசன் மாறியுள்ளார். இன்னும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறாத நிலையில், ஓய்வை குறித்து ஷாகிப் அல் ஹசனே முடிவுசெய்வார் என்று தெரிகிறது.

இந்நிலையில் தான் எப்போதும் சர்ச்சையில் சிக்கும் ஷாகிப் அல் ஹசன், தற்போதும் தன்னை காணவந்த ரசிகர் ஒருவரை கன்னத்தில் அறைந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கன்னத்தில் அறைந்த ஷாகிப் அல் ஹசன்!

எக்ஸ் வலைதளத்தில் வைரலாக பரவிவரும் வீடியோ ஒன்றில், ”ஷாகிப் அல் ஹசனிற்கு வாழ்த்து சொல்ல குவிந்த ரசிகர்கள் அவரை சூழ்ந்துள்ளனர். சிலர் அவரை விடாமல் சூழ்ந்து நெருக்கிய நிலையில், நிலைகுலைந்த அவர் கூட்டத்தில் தள்ளப்பட்டார். அப்போது தன்னை தள்ளிய ரசிகர் ஒருவரை கன்னத்தில் அறைந்த ஷாகிப், மற்றவர்களை தள்ளிவிட்டு காரில் ஏறிச்செல்கிறார்”.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com