\
dhoni - shai hope
dhoni - shai hopepti

”தோனி கொடுத்த அட்வைஸால் 352 ரன்சேஸ் சாத்தியமானது..” - ஷாய் ஹோப்

இந்தியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 352 ரன்களை சேஸ்செய்து வெஸ்ட் இண்டீஸ் வெற்றியை தட்டிச்சென்றது.
Published on: 
Summary

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 352 ரன்கள் சேஸ்செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, ஷாய் ஹோப்பின் 162 ரன்கள் மற்றும் தோனி கொடுத்த அட்வைஸால் வரலாற்று வெற்றியை பெற்றது. தோனியின் 'நேரம் அதிகம் உள்ளது' என்ற ஆலோசனை, ஹோப்பின் அணுகுமுறையை மாற்றி வெற்றியை உருவாக்கியது.

நேற்று நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான ODI போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 162 ரன்கள் விளாசிய ஷாய் ஹோப், 352 ரன்கள் என்ற அதிகபட்ச இலக்கை சேஸ்செய்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் வரலாற்று வெற்றிக்கு அழைத்துச்சென்றார். இதுதான் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள் கிரிக்கெட்டில் சேஸ்செய்த அதிகபட்ச இலக்காகும்.

2-1 என தொடரை இழந்தாலும் உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்தியாவை அவர்களின் சொந்தமண்ணில் வீழ்த்துவது முக்கியமான ஒன்றாக வெஸ்ட் இண்டீஸுக்கு மாறியுள்ளது.

இந்தசூழலில் போட்டி முடிந்தபிறகு ஆட்டநாயகன் விருதை வென்ற ஷாய் ஹோப், 352 ரன்கள் சேஸ்செய்யப்பட்டதற்கும், தன்னுடைய சிறந்த ஆட்டத்திற்கும் தோனி கொடுத்த அட்வைஸ் தான் காரணம் என வெளிப்படுத்தினார். போஸ்ட் மேட்ச் நிகழ்வில் பேசிய அவர், “தோனியுடன் ஒருமுறை பேசியபோது, நீங்கள் நினைப்பதை விட உங்களுக்கு எப்போதும் அதிக நேரம் இருக்கிறது’ என்று என்னிடம் கூறினார். அது என் கிரிக்கெட் அணுகுமுறையை மாற்றியது. அதனால் இறுதியில் முடிவு என்ன என்பதை பற்றி யோசிக்காமல், தற்போது என்னசெய்யவேண்டும் என பகுப்பாய்ந்து அதை செயல்படுத்துகிறேன். வெஸ்ட் இண்டீஸுக்காக போட்டிகளை வெல்லவேண்டும் என்பதே என் இலக்கு என பேசியுள்ளார்.

தோனி குறித்து ஷாய் ஹோப் பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com