
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி லீக் ஆட்டங்களில் 9 போட்டிகளில் விளையாடி 5போட்டிகளில் தோல்வியடைந்தது. மேலும் அரையிறுதிக்கு கூட தகுதிபெறாமல் உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. இதனால் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
தொடர் தோல்வியால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசாமும் பதவி விலக வேண்டுமென விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கெல் ஒப்பந்த காலம் முடியும் முன்பே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதையடுத்து அவருக்கு பதிலாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் பந்துவீச்சாளர் உமல் குல் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.