சஞ்சு சாம்சன் - தோனி
சஞ்சு சாம்சன் - தோனிX

’விரைவில் CSK-வில் சஞ்சு சாம்சன்..’ மூத்த சிஎஸ்கே அதிகாரி சொன்ன சர்ப்ரைஸ் தகவல்!

சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணியில் சேர்த்துக்கொள்வதற்கான விருப்பத்தை பார்த்து வருகிறோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த அதிகாரி கூறியிருப்பது சென்னை ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.
Published on

தோனி கேப்டன்சியில் 2023-ம் ஐபிஎல் தொடரை வென்ற பிறகு 5 ஐபிஎல் கோப்பை வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸின் சாதனையை சமன்செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

அதற்குபிறகு வயது மூப்பு காரணமாகவும், சிஎஸ்கே அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் கேப்டன்சி பதவியிலிருந்து விலகிய தோனி, புதிய கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு விட்டுக்கொடுத்தார்.

சிஎஸ்கே
சிஎஸ்கே web

2024 ஐபிஎல் தொடரில் ருதுராஜ் தலைமையில் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற போராடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் மட்டுமே முடித்தது. அதனைத்தொடர்ந்து நடந்து முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிஎஸ்கே புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் முடித்து மோசமான செயல்திறனை வெளிப்படுத்தியது.

குஜராத்தை தோற்கடித்தது சிஎஸ்கே
குஜராத்தை தோற்கடித்தது சிஎஸ்கேipl

அணியில் சிறந்த கலவை இல்லாததே சென்னையின் மோசமான தோல்விக்கு காரணமாக கூறப்பட்ட நிலையில், அதனை சரிசெய்யும் விதமாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனை அணியில் கொண்டுவரும் விருப்பத்தில் இருப்பதாக சிஎஸ்கேவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்

நாங்கள் சஞ்சு சாம்சனை பரிசீலித்து வருகிறோம்..

சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வர வாய்ப்புள்ளதாக கூறியிருக்கும் மூத்த அதிகாரி ஒருவர், “நாங்கள் நிச்சயமாக சஞ்சு சாம்சனை பரிசீலித்து வருகிறோம். அவர் ஒரு இந்திய வீரர் என்பதோடு விக்கர் கீப்பர் மற்றும் தொடக்க வீரராவார். எனவே அவர் கிடைத்தால், அவரை எங்கள் அணியில் சேர்த்துக் கொள்வதற்கான விருப்பத்தை நிச்சயமாகப் பார்ப்போம்.

அவரை எந்தவீரரை டிரேட் செய்து பரிமாறிக் கொள்வோம் என்பதை நாங்கள் இன்னும் பரிசீலிக்கவில்லை, ஏனெனில் விஷயம் இன்னும் அவ்வளவு தூரம் செல்லவில்லை. ஆனால் அவரை அணியில் சேர்க்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம்" என்று பேசியுள்ளார்.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

ஒருவேளை சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு கிடைத்தால் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இருக்கும் பெரிய பிரச்னைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி கிடைக்கும். சஞ்சு சாம்சன் கிடைத்துவிட்டால் அணிக்கான தோனியின் போராட்டமும் முடிவுக்கு வரும். சஞ்சு சாம்சனால் தோனிக்கு மாற்றாக விக்கெட் கீப்பர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டராகவும் செயல்பட முடியும். அதேநேரத்தில் தொடக்க வீரராகவும் விளையாட முடியும். அப்படி விளையாடினால் 3வது வீரராக விளையாட விரும்பும் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இருக்கும் கவலை நீங்கும். என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com