‘தம்பி நான் செஞ்சுரி அடிக்கணும்’.. ‘கொஞ்ச இருங்கண்ணே..’-ஜடேஜாவை நிற்க வைத்து படம் காட்டிய சர்ஃபராஸ்!

பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த சர்பராஸ் கான், அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே அரைசதம் அடித்து எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ஜடேஜா - சர்பராஸ் கான்
ஜடேஜா - சர்பராஸ் கான்Cricinfo

திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் நீண்ட காலம் காத்திருப்பது என்பது மிகப்பெரிய கொடுமை. அத்தகைய துயரத்தை நீண்ட காலம் அனுபவத்தவர் சர்ஃபராஸ் கான். எவ்வளவு தான் உங்களுக்கு நிரூபிப்பது என்ற வேதனை ஒவ்வொரு முறை சதம் அடித்தும் வாய்ப்பு கிடைக்காத போது அவருக்கு இருக்கும். சர்ஃபராஸ் கானுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தள்ளிப்போன வேதனை அவரது தந்தைக்கும் இருந்தது.

ஒவ்வொரு முறை இந்தியாவின் டெஸ்ட் அணி அறிவிக்கப்படும் போதும், சர்ஃபராஸ் கானின் பெயர் அடிபடும். கடந்த 3 வருடங்களாக முதல்தர கிரிக்கெட்டில் ரன்களை வாரிகுவித்து “ரஞ்சிக்கோப்பையின் நம்பர் 1 வீரராக” இருந்துவரும் சர்ஃபராஸ் கானுக்கு ஏன் வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்ற கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகும். ஆனாலும் ஒவ்வொருமுறையும் சர்ஃபராஸ்கானின் பெயர் இந்திய அணியின் பட்டியலில் இடம்பெறாமல் தவிர்க்கப்படும். சர்ஃபராஸ் கானும் தன்னுடைய வலிகளை வெளிப்படையாக தெரிவித்த போதும் கூட இந்திய அணியின் தேர்வுக்குழு தொடர்ந்து மௌனம் சாதித்தது.

சர்பராஸ் கானின் தொடர் நிராகரிப்பை சகித்துக்கொள்ளாத முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கூட, “உங்களுக்கு பார்ப்பதற்கு ஸ்லிம்மாக இருப்பவர்தான் வேண்டுமென்றால் ஃபேஷன் ஷோ நடத்த செல்லுங்கள்” என்று பிசிசிஐ தேர்வுக்குழுவை கடுமையாக சாடியிருந்தார்.

அதேபோல தென்னாப்பிரிக்காவின் அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் கூட, “ஒரு வீரர் கடந்த 3 வருடங்களாக 69 சராசரியுடன் ரன்களை குவித்துவருகிறார் என்றால், அது சாதாரண விஷயம் கிடையாது. யாருக்காவது வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென்றால், அது முதலில் சர்ஃபராஸ் கானுக்குதான் வழங்கப்படவேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

சர்பராஸ் கான்
சர்பராஸ் கான்

இந்நிலையில், தொடர் போராட்டங்களுக்கு பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சர்பராஸ் கானின் பெயர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டது. அப்போது தன் மகனுக்கு வாய்ப்பளித்ததற்கு வீடியோ வெளியிட்டு சர்பராஸ் கானின் தந்தை பிசிசிஐ-க்கு நன்றி தெரிவித்திருந்தார். அதேபோல இந்திய அணியில் இடம்பெற்றது குறித்து சர்பராஸ் கானும் கண்ணில் கண்ணீரோடு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.

ஜடேஜா - சர்பராஸ் கான்
2000 to 2024: 11 ICC பைனல்களில் தோற்ற இந்தியா! இத்தனை கோப்பை தவறவிட என்ன காரணம்? எங்கே சொதப்புகிறது?

அறிமுக போட்டியிலேயே அரைசதம் விளாசிய சர்பாராஸ்!

ராஜ்கோட்டில் தொடங்கிய 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் யஷஸ்வி 10 ரன்கள், கில் 0 ரன்கள், பட்டிதார் 5 ரன்கள் என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். 33 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழக்க, 4வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த கேப்டன் ரோகித் மற்றும் ரவிந்திர ஜடேஜா இருவரும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

rohit sharma
rohit sharma

கேப்டன் ரோகித் சர்மா தன்னுடைய 11வது டெஸ்ட் சதத்தை பதிவுசெய்து 131 ரன்கள் அடிக்க, 4வது விக்கெட்டுக்கு 204 ரன்கள் பார்ட்னர்ஷிப்போட்டது இந்திய அணி. ரோகித் 131 ரன்களுக்கு வெளியேற, 5வது விக்கெட்டுக்கு அறிமுக போட்டியில் களமிறங்கினார் சர்பராஸ் கான். ரஞ்சிக்கோப்பையில் தொடர்ச்சியாக இரண்டு சீசன்களில் 900 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே வீரராக இருந்த சர்பராஸ் கான், 2000 ரன்களுக்கு மேல் அடித்து அதிக சராசரி வைத்திருந்த வீரர்களில் டான் பிராட்மேனுக்கு அடுத்த வீரர் என்ற சாதனையையும் தன்வசம் வைத்திருந்தார்.

sarfaraz khan
sarfaraz khan

ரஞ்சிக்கோப்பையிலே ஊறி நம்பர் 1 வீரராக திகழ்ந்த சர்ஃபராஸ் கான், அறிமுக இன்னிங்ஸிலேயே அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி எல்லோரையும் அசரவைத்தார். ஸ்வீப், லேட் கட், ஸ்டிரைட் ஹிட், ஸ்லாக் ஸ்வீப் என தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி ஓவருக்கு ஒரு பவுண்டரி என விரட்டி ரன்களை எடுத்துவந்தார். 7 பவுண்டரிகள் 1 சிக்சர் என மிரட்டிய சர்பராஸ் அறிமுக போட்டியிலேயே 48 பந்துகளுக்கு அரைசதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே குறைவான பந்துகளில் அரைசதமடித்த 3வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.

sarfaraz khan
sarfaraz khan

62 ரன்களில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி விளையாடிக்கொண்டிருந்த சர்பராஸ் கான், மார்க் வுட் பந்தில் ரன்அவுட்டாகி வெளியேறினார்.

ஜடேஜா - சர்பராஸ் கான்
“125 கோடி பேரில் ஒருவனாக இந்தியாவிற்கு ஆடவேண்டும் என்பது என் தந்தை கனவு” - எமோஷனலாக பேசிய சர்ஃபராஸ்!

இங்கிலாந்துக்கு எதிராக 2வது சதம் விளாசிய ஜடேஜா!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 87 ரன்கள் 5 விக்கெட்டுகள் என வீழ்த்திய ரவிந்திர ஜடேஜா, ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 ஆல்ரவுண்டராக மாறி அசத்தியிருந்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஓய்விலிருந்த ஜடேஜா, மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இன்று திரும்பினார்.

jadeja
jadeja

முக்கியமான தருணத்தில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் பேட்டிங்கில் கைக்கோர்த்த ஜடேஜா, ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 198 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விளாசிய ஜடேஜா, தன்னுடைய 4வது சர்வதேச டெஸ்ட் சதத்தை பதிவுசெய்தார். இங்கிலாந்துக்கு எதிராக ஜடேஜாவின் இரண்டாவது டெஸ்ட் சதம் இதுவாகும். தன்னுடைய பிரைம் ஃபார்மில் இருந்துவரும் ஜடேஜா பேட்டிங்கில் கிளாசிக்கான ஆட்டத்தை ஆடிவருகிறார்.

jadeja
jadeja

110* ரன்களுடன் ஜடேஜா களத்திலிருக்கும் நிலையில், முதல்நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்துள்ளது.

ஜடேஜா - சர்பராஸ் கான்
”புத்தகங்களில் குவியும் தூசியால் கதைகள் முடிவதில்லை”! - விரக்தியில் எமோசனல் பதிவிட்ட இந்திய வீரர்!

‘தம்பி நான் செஞ்சுரி அடிக்கணும்’.. ‘கொஞ்ச இருங்கண்ணே நானும் வர்ரேன்..’

கேப்டன் ரோகித் சர்மா ஆட்டமிழக்கும் போதும் இந்திய அணி 63.3 ஓவர்களில் 237 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்திருந்தது. 81.5 ஆவது ஓவரில் சர்ஃபராஸ் கான் ஆட்டமிழக்கும் போது இந்திய அணி 314 ரன்கள் எடுத்தது. ஜடேஜா - சர்ஃபராஸ் ஜோடி மொத்தம் 77 ரன்கள் எடுத்தது. அதில் சர்ஃபராஸ் மட்டுமே 62 ரன்கள் எடுத்துள்ளார். மீதமுள்ள 15 ரன்கள் மட்டுமே ஜடேஜா எடுத்தார் என்றால் எந்த அளவிற்கு ஜடேஜாவை நிற்க வைத்து சர்ஃபராஸ் படம் காட்டியிருப்பார் என்று பாருங்கள். ஜடேஜா 90 ரன்களை எப்போதோ கடந்துவிட்ட போதும் அவரை மறுமுனையில் வைத்து பவுண்டரிகளாக விளாசினார் சர்ஃபராஸ். இந்த வேகத்தில் சென்றால் ஜடேஜாவுக்கு முன்னாள் சதம் விளாசினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்று பேசப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகிவிட்டார். இல்லையென்றால் சர்ஃபராஸ் சதம் விளாசி இருப்பதற்கான அத்தனை வாய்ப்புகளும் இருந்தது. இருப்பினும் இதெல்லாம் எந்தவொரு விளையாட்டு போட்டியிலும் இயல்பாக நடப்பது தான். எப்படி இருந்தால் தன்னுடய முதல் போட்டியை சிறப்பாகவே தொடங்கி இருக்கிறார் சர்ஃபராஸ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com