என்னை எல்லோரும் மிகவும் துரதிர்ஷ்டசாலி கிரிக்கெட் வீரர் என்று அழைக்கிறார்கள்! - சஞ்சு சாம்சன்

"என்னை எல்லோரும் அதிர்ஷ்டமில்லாத கிரிக்கெட் வீரர் என்றும், துரதிர்ஷ்டசாலியான கிரிக்கெட் வீரர் என்றும் கூறுகிறார்கள்" சஞ்சு சாம்சன்
sanju samson
sanju samsonDhanya Varma YT

இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கு என எப்போதும் ஒரு தனியிடம் உண்டு. அந்த இடத்திற்கான போட்டியில் பல சிறந்த வீரர்கள் முட்டிமோதினாலும் ஒருசில தலை சிறந்த வீரர்களே இதுவரை ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். எப்படி பார்த்திவ் பட்டேல், தினேஷ் கார்த்திக் போன்ற சிறந்த வீரர்கள் இருந்தபோதும் மகேந்திர சிங் தோனி என்ற ஒரு தலைசிறந்த வீரர் அந்த இடத்தை பசைப்போட்டு ஒட்டிக்கொண்டாரோ, அதேபோல சஞ்சு சாம்சனுக்கான இடத்தில் ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் போட்டிக்கான வரிசையில் இருக்கிறார்கள்.

sanju samson
sanju samson

ரிஷப் பண்ட் இல்லாதபோது சஞ்சு சாம்சனுக்கான ஒரு வாய்ப்பு உலகக்கோப்பையில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டபோது இஷான் கிஷனை இந்திய அணி உலகக்கோப்பைக்கு எடுத்துச்சென்றது.

இந்த இடத்தில் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவான ரசிகர்கள் நிச்சயம் மனமுடைந்துதான் போயிருப்பார்கள். இந்திய அணிக்கு எப்போதும் வீரர்கள் தேவையான ஒரு இடம் என்றால் அது மிடில் ஆர்டர் இடம் தான். யுவராஜ் சிங் மற்றும் எம்எஸ் தோனி என்ற தலைசிறந்த வீரர்களின் ஓய்விற்கு பிறகு, அந்த இடத்தில் 50 சராசரிக்கு மேல் ரன்களை அடித்திருப்பவர்கள் என்று பார்த்தால், கேஎல் ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இரண்டு வீரர்கள் மட்டும் தான். அப்படியிருக்கும்போது இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ் என்ற இரண்டு வீரர்களை எடுத்துச்சென்றது மட்டுமில்லாமல், தற்போது ஆஸ்திரேலியா அணிக்கான டி20 தொடரிலும் சஞ்சு சாம்சனின் பெயர் இடம்பெறாமல் போனது பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

பல இந்திய ரசிகர்கள் "அப்படி என்ன தான் சஞ்சு சாம்சன் தவறு செய்துவிட்டார்" என்றும், "உண்மையில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் வஞ்சிக்கப்பட்ட ஒரு கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தான்" என்றும், "சஞ்சு சாம்சனை போன்ற ஒரு அதிர்ஷ்டமில்லாத கிரிக்கெட் வீரர் யாரும் இல்லை" என்றும் தங்களது ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் பதிவுசெய்துவருகின்றனர். ரசிகர்கள் தான் ஒருபுறம் என்றால் நாடாளுமன்ற உறுப்பினரான சசி தரூரும் ”இது நியாயமற்ற செயல்” என்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

என்னை எல்லோரும் மிகவும் துரதிர்ஷ்டசாலி என்கிறார்கள்! - சஞ்சு சாம்சன்

ரசிகர்களின் ஆதங்கம் குறித்தும், துரதிர்ஷ்டசாலி கிரிக்கெட்டர் என்று கூறுவது குறித்தும் தன்ய வர்மா யூ-டியூப் பக்கத்தில் மனம் திறந்து பேசியுள்ளார் சஞ்சு சாம்சன். தன்னுடைய தற்கால கிரிக்கெட் நிலைமை குறித்து பேசியிருக்கும் சஞ்சு, “ மக்கள் என்னை மிகவும் துரதிர்ஷ்டசாலி கிரிக்கெட் வீரர் என்று அழைக்கிறார்கள். ஆனால் நான் என்னுடைய கிரிக்கெட் பயணத்தை எங்கிருந்து தொடங்கி தற்போது எங்கே இருக்கிறேன் என்று பார்த்தால், உண்மையில் இது நான் நினைத்ததை விட மிக உயரமான இடத்தில் தான் இருக்கிறேன்” என்று பேசியுள்ளார்.

Dhanya Varma YT
Dhanya Varma YT

தற்போது விஜய் ஹசாரே டிராபியில் கேரளாவுக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன், விரைவில் 2024 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் தலைமை தாங்குவார். பிசிசிஐ முன்பு வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்தத்தில் சஞ்சு சாம்சனுடன் கையெழுத்திட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவருக்கான வாய்ப்பு விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டில் வரும் என்ற எதிர்ப்பார்ப்புடன் சஞ்சு சாம்சனின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com