தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை ஏன் இந்தியாவால் வெல்ல முடியவில்லை? - சஞ்சய் பங்கர் விளக்கம்

தென்னாப்பிரிக்காவில் இந்திய அணியால் இதுவரை ஏன் டெஸ்ட் தொடரை வெல்ல முடியவில்லை என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கர் விளக்கமளித்துள்ளார்.
ind vs sa
ind vs saweb

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அணிகளை எல்லாம் அவர்களின் சொந்த மண்ணிலேயே வைத்து டெஸ்ட் தொடரில் வெற்றிபெற்றிருக்கும் இந்திய அணியால், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக மட்டும் ஒருமுறை கூட டெஸ்ட் தொடரில் வெற்றபெற முடியவில்லை. இதுவரை 8 முறை தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி, 2010-ஆம் ஆண்டு மட்டுமே தோனி தலைமையில் டெஸ்ட் தொடரை 1-1 என சமன்செய்துள்ளது. அதற்கு பிறகு சென்ற கோலி தலைமையிலான இந்திய அணி 2-1 என தோல்வியை தழுவியது.

23 போட்டிகளில் 4 போட்டியில் மட்டுமே வெற்றி!

தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி இதுவரை 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 12 முறை தென்னாப்பிரிக்கா அணியும், 4 முறை மட்டுமே இந்திய அணியும் வெற்றிபெற்றுள்ளன. 7 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

ind vs sa
ind vs sa

ஒட்டுமொத்தமாக இவ்விரண்டு அணிகளும் 42 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தென்னாப்பிரிக்கா 17 போட்டிகளிலும், இந்திய அணி 15 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. 10 போட்டிகள் டிரா செய்யப்பட்டுள்ளன.

ஏன் இந்தியாவால் தென்னாப்பிரிக்காவில் வெல்ல முடியவில்லை!

இந்நிலையில் எதனால் இந்திய அணியால் தென்னாப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியவில்லை என்பதற்கான காரணத்தை விளக்கியுள்ளார், முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் பங்கர். அவரது கூற்றுப்படி இந்திய அணி அதிக போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடமுடியவில்லை, அதனால் இந்திய அணியால் கண்டிசனுக்கு தகுந்தார்போல் தங்களை தயார் செய்துகொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார்.

sanjay bangar
sanjay bangar

இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசியிருக்கும் அவர், ”இதுவரை தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி 2 அல்லது 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மட்டுமே விளையாடியுள்ளது. அதனால்தான் தென்னாப்பிரிக்காவில் இந்தியாவால் டெஸ்ட் தொடரை வெல்ல முடியவில்லை. மாறாக அவர்கள் 4 அல்லது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடினால், அது அவர்களின் ஆட்டத்தில் முன்னேற்றத்தை கொண்டுவரும். கண்டிசனை சரியாக புரிந்துகொண்டு தொடரில் எழுச்சி பெற உதவும். விரைவில் அவர்கள் 4 அல்லது 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வேண்டும்” என சஞ்சய் பங்கர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com