சஜித் கான்
சஜித் கான்web

'மற்ற PAK வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்..' ஜெர்சியில் வழிந்த ரத்தம்.. வெளியேறாமல் ஆடிய சஜித் கான்!

எங்க பா இவ்வளவு நாள் பதுக்கி வச்சிருந்தீங்க என்ற வார்த்தையை தான் மறுபடியும் பாகிஸ்தான் அணியிடம் கேட்க தோன்றுகிறது. 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய பிறகும் 10வது வீரராக வந்து ரத்தம் வழிய 4 சிக்சர்களுடன் 48 ரன்களை குவித்துள்ளார் பாகிஸ்தான் வீரர் சஜித் கான்.
Published on

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது.

முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் இரட்டை சதமும், ஹாரி ப்ரூக் முச்சதமும் அடித்து அசத்த 823 ரன்களை குவித்த இங்கிலாந்து அணி பாகிஸ்தானை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது.

சஜித் கான்
சஜித் கான்

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் பாபர் அசாம், நஷீம் ஷா, ஷாஹீன் அப்ரிடி முதலிய வீரர்கள் நீக்கப்பட்டு சஜித் கான், நோமன் அலி முதலிய ஸ்பின்னர்களும், கம்ரான் குலாம் என்ற பேட்ஸ்மேனும் அணியில் சேர்க்கப்பட்டனர்.

குலாம் அசத்தலான சதம் மற்றும் சஜித் கான் 9 விக்கெட்டுகள், நோமன் அலி 11 விக்கெட்டுகள் என இங்கிலாந்தை திணறடிக்க பாகிஸ்தான் அணி 15 தொடர் தோல்விகளுக்கு பிறகு சொந்த மண்ணில் முதல் வெற்றியை பதிவுசெய்தது.

sajid khan
sajid khanweb

9 விக்கெட்டுகளை கைப்பற்றி சுழல் மாயாஜாலம் செய்த சஜித் கான் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

சஜித் கான்
எங்கயா பதுக்கி வச்சிருந்தீங்க| 200, 300 ரன்கள் குவித்த ரூட்-ப்ரூக் ஸ்டம்புகளை தகர்த்த PAK ஸ்பின்னர்!

இரண்டு பேர் மட்டும் 32 விக்கெட்டுகள்..

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு அணிக்கு எதிராக போராடிய பாகிஸ்தான் பவுலர்களால் வெறும் 7 விக்கெட்டை மட்டுமே வீழ்த்த முடிந்தது. அதற்குள் இங்கிலாந்து அணி 823 ரன்களை குவித்து போட்டியை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சஜித் கான் மற்றும் நோமன் அலி இருவரும் வந்தபிறகு, இந்த சுழற்பந்துவீச்சு ஜோடி இங்கிலாந்து அணியை திணறடித்து வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் 20 விக்கெட்டுகளையும் இந்த இரண்டு ஸ்பின்னர்கள் மட்டுமே கைப்பற்றினர்.

சஜித் கான் - நோமன் அலி
சஜித் கான் - நோமன் அலிweb

அதனைத்தொடர்ந்து நடைபெற்றுவரும் 3வது டெஸ்ட் போட்டியிலும் இதுவரை 12 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டிவருகின்றனர்.

சஜித் கான்
மீண்டும் சுழல் மாயாஜாலம்.. 10 விக்கெட்டையும் வீழ்த்திய PAK ஸ்பின்னர்கள்! 267 ரன்னுக்கு ENG ஆல்அவுட்!

ரத்தம் வழிந்தாலும் களத்தில் நின்ற சஜித் கான்..

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது 1-1 என சமநிலையில் இருக்கும் நிலையில், தொடரின் வெற்றியை உறுதிசெய்யும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிவருகின்றன.

சஜித் கான்
சஜித் கான்

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி சஜித் கான் சுழலை சமாளிக்க முடியாமல் 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சஜித் கான் 6 விக்கெட்டையும், நோமன் அலி 3 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

சவுத் ஷகீல்
சவுத் ஷகீல்

அதற்குபிறகு விளையாடிய பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக விக்கெட்டை பறிகொடுத்தாலும் ஒருமுனையில் நிலைத்து நின்று ஆடிய சவுத் ஷகீல் சதமடித்து அசத்தினார். ஷகீல் 134 ரன்களுக்கு வெளியேற 10வது வீரராக களத்திற்கு வந்த சஜித் கான், 48 பந்துகளில் 4 சிக்சர்கள் 2 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் குவித்து அசத்தினார்.

அப்போது பேட்டிங்கின்போது ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயற்சித்த சஜித் கானின் தாடையில் பந்து பட்டு ரத்தம் வழிய தொடங்கியது. ஆனால் அணிக்காக தொடர்ந்து விளையாட நினைத்த சஜித் கான் ஒன்றுமில்லை என தம்ப்ஸ் அப் காட்டி, மாற்று டீ சர்ட்டை மட்டும் எடுத்துவருமாறு சைகை காட்டினார். பின்பு டீ சர்ட்டை மாற்றிவிட்டு விளையாடியவர் 48 பந்துகளில் 48 ரன்கள் விளாசி நாட் அவுட்டுடன் களத்தில் நின்றார்.

அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 344 ரன்கள் சேர்த்தது. அதனைத் தொடர்ந்து விளையாட வந்த இங்கிலாந்து அணி 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. சஜித் கான் ஒரு விக்கெட்டும், நோமன் அலி 2 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர். தொடரை வெல்லும் தருவாயில் பாகிஸ்தான் சென்று கொண்டிருக்கிறது.

ரத்தம் வழிந்தாலும் வெளியேறாமல் அணிக்காக விளையாடிய சஜித் கானின் அர்ப்பணிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

சஜித் கான்
‘அவரது கேரியரில் மிக மோசமான ஷாட்டை விளையாடினார்..' விராட் கோலி விக்கெட் குறித்து மஞ்ச்ரேக்கர்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com