சாய் சுதர்சன்
சாய் சுதர்சன்cricinfo

கிடைத்த வாய்ப்பை கோட்டைவிட்ட சாய் சுதர்சன்.. 13 ரன்னில் தவறிப்போன முதல் சதம்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சனுக்கு எதிரான கேட்சை வெஸ்ட் இண்டீஸ் அணி
Published on

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதில் இந்திய வீரர்கள் கேஎல் ராகுல், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா 3 வீரர்கள் சதமடித்து அசத்தினர். 448 ரன்கள் அடித்து டிக்ளார் செய்த இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸை 162 மற்றும் 146 ரன்களில் சுருட்டி அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது.

முதல் சதம் விளாசிய துருவ் ஜூரெல்
முதல் சதம் விளாசிய துருவ் ஜூரெல்web

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.

சாய் சுதர்சன்
100 சராசரி| 7-வது டெஸ்ட் சதம் விளாசிய ஜெய்ஸ்வால்.. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக சம்பவம்!

87 ரன்னில் அவுட்டான சாய் சுதர்சன்..

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 7வது டெஸ்ட் சதமடித்து அசத்தினார்.

ஜெய்ஸ்வால்
ஜெய்ஸ்வால்

மறுமுனையில் சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன் அரைசதமடித்த நிலையில், 58 ரன்கள் அடித்தபோது அவருடைய கேட்சை வெஸ்ட் இண்டீஸ் அணி கோட்டைவிட்டது. இதைப் பயன்படுத்திக்கொண்ட சுதர்சன் 12 பவுண்டரிகளுடன் சதத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

எப்படியும் முதல் சர்வதேச சதத்தை பதிவுசெய்துவிடுவார் என நினைத்தபோது 87 ரன்னில் ஆட்டமிழந்து கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார் சுதர்சன்.

சாய் சுதர்சன்
முஷீர் கான் சொன்ன 2 வார்த்தை.. பேட்டால் அடிக்க பாய்ந்த பிரித்வி ஷா! வெளிவந்த காரணம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com