Sai Sudharsan breaks chris gayles historic record in ipl 2026
சாய் சுதர்ஷன்எக்ஸ் தளம்

RCB அணியை வெளுத்து வாங்கிய சாய் சுதர்ஷன்.. IPL வரலாற்றில் பிரம்மாண்ட சாதனை!

சாய் சதர்சன் அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 58 பந்துகளில் 11 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் மூலம் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
Published on

சாய் சுதர்சன் இந்த ஐபிஎல்லில் சதம் அடித்ததன் மூலம், அதிரடி மன்னன் கிறிஸ் கெய்லின் பல ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். இந்தப் போட்டியின்போது சாய் சுதர்சன் ஐபிஎல் அரங்கில் தனது 2000 ரன்களைக் கடந்தார்.

நடப்பு ஐபிஎல் தொடர் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கு எல்லா அணிகளும் போட்டிபோட்டு வருகின்றன. இந்த நிலையில், தொடரின் இன்றைய 34ஆவது போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் ஜெயித்த பெங்களூரு அணி முதலில் குஜராத் அணியைப் பேட் செய்ய பணித்தது. அதன்படி, தொடக்க வீரர்களாக தமிழக வீரர் சாய் சுதர்சனும், சுப்மன் கில்லும் இன்னிங்ஸைத் தொடங்கினர். இந்தப் போட்டியில் இருவரும் நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். சுப்மன் கில் 32 ரன்களில் நடையைக் கட்டினாலும், சாய் சதர்சன் அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 58 பந்துகளில் 11 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் மூலம் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவரது சதத்தால், அந்த அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. முன்னதாக, சாய் சுதர்சன் இந்த ஐபிஎல்லில் சதம் அடித்ததன் மூலம், அதிரடி மன்னன் கிறிஸ் கெய்லின் பல ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். இந்தப் போட்டியின்போது சாய் சுதர்சன் ஐபிஎல் அரங்கில் தனது 2000 ரன்களைக் கடந்தார். வெறும் 47 இன்னிங்ஸ்களில் இந்த இலக்கை எட்டியதன் மூலம், கிறிஸ் கெய்ல் (48 இன்னிங்ஸ்) வைத்திருந்த உலக சாதனையை முறியடித்து, ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 2000 ரன்களைக் கடந்த வீரர் என்ற புதிய சரித்திரத்தைப் படைத்தார். மேலும், இந்திய அளவில் 1,361 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டி, அபிஷேக் சர்மா, வீரேந்திர ஷேவாக் போன்ற ஜாம்பவான்கள் வரிசையிலும் இணைந்தார். மேலும் குஜராத் அணிக்காக அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலிலும் சாய், 3 சதங்களுடன் 2வது இடத்தில் உள்ளார். அவர் சென்னை, டெல்லி, பெங்களூரு ஆகிய அணிகளுக்காக அடித்துள்ளார். இந்த 3 சதங்களும் 2024, 25, 26 ஆகிய ஆண்டுகளில் வந்தது. முதல் இடத்தில் 4 சதங்களுடன் சுப்மன் கில் உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com