\
sachin tendulkar adviced Vaibhav Sooryavanshi
Vaibhav SooryavanshiANI

'அவசரம் கூடாது..' வைபவ் சூர்யவன்ஷி குறித்து சச்சின் முக்கிய அறிவுரை!

வைபவ் சூர்யவன்ஷி குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் ஆலோசனை கூறியுள்ளார்.
Published on: 

ஐபிஎல் மற்றும் உள்நாட்டுத் தொடர்களில் சிறப்பாக விளையாடியதைத் தொடர்ந்து, 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி இந்திய கிரிக்கெட் கிரிக்கெட் அணியிலும் இடம்பிடித்து விளையாடி வருகிறார். அதேநேரத்தில், அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டுகளையும், தொடர் அழுத்தம் தரக்கூடாது என்கிற ஆலோசனைகளையும் கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், வைபவ் சூர்யவன்ஷி குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் ஆலோசனை கூறியுள்ளார்.

sachin tendulkar
sachin tendulkarANI

உரையாடல் ஒன்றில் இதுகுறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், “துலீப் கோப்பை போன்ற தொடரில் இவ்வளவு இளம்வயதிலேயே அவருக்கு துணை கேப்டன் பதவி கொடுத்தது மிகவும் அவசரமான முடிவு. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் அதிகமான போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு படியாக நிதானமாக எடுத்து வைக்க வேண்டும்" எனத் தெரிவித்தார். மேலும் அவர், இந்திய டி20 அணியில் நிலையான தொடக்க ஆட்டக்காரர்களாக உள்ளதால், வைபவை அவசரப்படுத்தாமல் பக்குவமாக கையாள வேண்டும்” என அறிவுரையும் வழங்கி உள்ளார்.