\
ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ்cricinfo

RR vs GT| ஜெய்ஸ்வால், ஜூரல் அதிரடி அரைசதம்.. 210 ரன்கள் குவித்த ராஜஸ்தான்!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 210 ரன்கள் குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
Published on
Summary

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 210 ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் 6 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 55 ரன்கள், ஜூரல் 5 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 75 ரன்கள் குவித்து குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சை சிதறடித்தனர்.

2026 ஐபிஎல் தொடரானது மார்ச் 28ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 10 அணிகளும் ஒற்றைக் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்திவரும் நிலையில், இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. சுப்மன் கில் உடல்நிலை சரியில்லாததால் அவருக்கு பதிலாக ரசீத் கான் குஜராத் கேப்டனாக வழிநடத்தினார்.

ஜெய்ஸ்வால் - சூர்யவன்ஷி
ஜெய்ஸ்வால் - சூர்யவன்ஷி

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து விளையாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யவன்ஷி இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

ஜெய்ஸ்வால்
ஜெய்ஸ்வால்

5 பவுண்டரிகள் 1 சிக்சர் என பறக்கவிட்ட சூர்யவன்ஷி 31 ரன்னில் அவுட்டாக, மறுமுனையில் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என துவம்சம் செய்த ஜெய்ஸ்வால் அரைசதமடித்து அசத்தினார். தொடர்ந்து வந்த துருவ் ஜூரல் தொடக்கத்தில் நிதானமாக தொடங்கினாலும் பின்னர் 5 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என நாலாபுறமும் சிதறடித்து வேடிக்கை காட்டினார்.

ரசீத் கான்
ரசீத் கான்

ஜூரல் 75 ரன்களும், ஜெய்ஸ்வால் 55 ரன்களும் அடிக்க 20 ஓவரில் 210 ரன்களை சேர்த்தது ராஜஸ்தான் அணி. குஜராத் அணியில் ககிசோ ரபாடா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ்
“எங்கிருந்தோ வந்த தோனி கேப்டன் ஆக்கப்பட்டார்..” - 18 வருட ஏமாற்றத்தை வெளிப்படுத்திய யுவராஜ்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com